News Update :

Wednesday, September 4, 2019

TamilLetter

தேசிய காங்கிரஸில் இணையும் அட்டாளைச்சேனையின் முஸ்லிம் காங்கிரஸின் பிரமுகர்

எஸ்.எம்.சியாத்

கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் தேசிய காங்கிரஸ் தனித்து போட்டியிட்ட நிலையில் சுமார் 7500 வாக்குகளை பெற்று 06 உறுப்பினர்களை தன்வசப்படுத்தியிருந்தது.

அட்டாளைச்சேனை முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையாக இருந்து வந்த போதும் கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலின் போது அம் மக்கள் எடுத்த அரசியல் நிலைப்பாடு பெரும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியிருந்தது.

இப்படியான அபாரா வளர்ச்சியை எட்டியிருந்த நிலையில் அக்கட்சியின் தேசிய அமைப்பாளராக இருந்த முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.

உதுமாலெப்பையின் விலகல் எந்தவிதத்திலும் கட்சியை பாதிக்கவில்லை என்று கட்சியின் தலைவரால் கூறப்பட்ட போதும் அதற்கு வலுச்சேர்க்கும் விதமாக தேசிய காங்கிரஸினால் தெரிவு செய்யப்பட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் உதுமாலெப்பையோடு சென்று விடாமல் கட்சியின் தலைமைக்கு விசுவாசமாகவே தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றனர்.

இருந்த போதும் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் உதுமாலெப்பையின் வெற்றிடத்தை நிரப்புவதற்கு தகுதியான ஒருத்தரை அக்கட்சி இன்னும் அடையாளப்படுத்தவில்லை.

இச்  சூழ்நிலையில்  தேசிய காங்கிரஸின் கட்சியின் இரண்டாம் மூன்றாம் தலைமைகள் கூட தலையேற்பதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர்.
இதனை கருத்தில் கொண்ட அட்டாளைச்சேனை பிரதேச தேசிய காங்கிரஸின் முக்கியஸ்தர்கள்  கட்சியை சரியான பாதையில் வழிநடத்தக் கூடிய ஒருத்தரை கட்சியின் அமைப்பாளராக நியமிப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.

அட்டாளைச்சேனை தேசிய காங்கிரஸின் முக்கியஸ்தர்களால் இனம்காணப்பட்ட அந்த நபர்   அட்டாளைச்சேனை முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய பொறுப்பில் இருந்தவர்.

அட்டாளைச்சேனை தேசிய காங்கிரஸின் முக்கியஸ்தர்களால் தீர்மானிக்கப்பட்ட விடயம் தொடர்பாக சம்மந்தப்பட்ட நபரிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறிப்பிட்ட அந்த நபரும் அமைப்பாளராக வருவதற்கு தனது விருப்பத்தை தெரிவித்துள்ளதாகவும்.அப்படி தான் அமைப்பாளராக வருவதென்றால் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டுமென்ற நிபந்தனையும் விதித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதனை ஏற்றுக் கொண்ட நிர்வாகிகள் தலைவர் அதாஉல்லாவோடு இது தொடர்பாக பேசியுள்ளதாகவும் தலைவர் அவர்கள் அக்கரைப்பற்றுக்கு வந்தவுடன் இது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-