News Update :

Friday, September 20, 2019

TamilLetter

ரணில் தேல்வியடைவது நிச்சயம் - அமைச்சர் ரவூப் ஹக்கிம்



ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தாவிட்டால் தோல்வியடைவது நிச்சயமெனத் தெரிவித்துள்ள ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதான பங்காளி கட்சிகளில் ஒன்றான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸின் தலைவர், இந்த யதார்த்தத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புரிந்துகொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
எதிர்வரும் ஒருசில நாட்களில் இது தொடர்பில் தெளிவான தீர்மானம் ஒன்றை கட்சியின் தலைவர் எடுக்க வேண்டுமெனவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு மக்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றிருக்கும் அமைச்சர் சஜித் பிரேமதாசவை வேட்பாளராக களமிறக்க வேண்டியதன் அவசியம் தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகள் பிரதமர்
ரணில் விக்கிரமசிங்கவிற்கு தெளிவுபடுத்தியுள்ளதாகவும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஏற்பட்டிருந்த இழுபறிகள் தொடர்ந்து நீடிக்கின்றன. இம்முறை தான் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடத் தயார் என்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிறேமதாச அறிவித்து வருவதுடன், அவருக்கு அந்தக் கட்சியின் ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் பகிரங்கமாக ஆதரவு வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவும், சபாநாயகர் கரு ஜயசூரியவும் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதால் குழப்பம் மேலும் தீவிரமடைந்துள்ளது.
இந்த நிலையில் அலரிமாளிகையில் நேற்றைய தினம் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தனர்.
இதன்போது தேர்தலுக்காக உருவாக்கப்பட்டுள்ள ஜனநாயக தேசிய முன்னணிக்கான யாப்பு ஒன்றை உருவாக்குவது தொடர்பில் இறுதித் தீர்மானத்தை மேற்கொள்வது தொடர்பிலும், ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளன

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-