News Update :

Monday, September 30, 2019

TamilLetter

இலங்கை தர்ஷன் வெளியேற்றப்பட்டமைக்கான பின்னணி


முகின் வெற்றியாளராக்கப்பட வேண்டிய தேவையின் பாதையில் தடைக்கல்லாக இருந்த தர்ஷன் வெளியேற்றப்பட்டான்?!!

பெரிய நிறுவனங்கள் நிலையான வெற்றிக்காக(Sustainable success) காலத்திற்க்கு காலம் வியாபார உத்திகளை( Business strategies) வடிவமைப்பது வழமை.
அந்த வகையில் விஜய் ரீவி நிர்வாகத்தின் வியாபார உத்தியாக 2017-2018 இல் கிராமப்புறங்களில் அதன் ஆதிக்கத்தை ஏற்படுத்திக்கொள்வதே இருந்தது. நீண்ட காலமாக sun  tv  ஆதிக்கமே பல கிராமமக்களின், அல்லது கீழ்த்தட்டு, நடுத்தரவர்க்க மக்களின் நடைமுறை வாழ்கையில் இருந்தது. அதனை ஊடுருவி vijay tv  க்கு பல வாடிக்கையாளர்களை உருவாக்கும் உத்தியாகவே, சூப்பர் சிங்கரில், செந்தில்- ராஜலக்ஷ்மி, BiggBoss 2 வில் ரித்விகா, விலேஜ்  to வில்லா நிகழ்ச்சி, சூப்பர் சிங்கர் ஜூனியர்  5 பிரீத்திகா, பண்ணையார் மகன் கௌதம் போன்றவர்கள் வெற்றியாளர்களாக்கி விஜய் ரீவி தன் ஆதிக்கத்தை கிராமப்புறங்களில் செலுத்த ஆரம்பித்தது. அவர்களுக்கு திறமை இருந்ததும் உண்மை தான்.   ஆனால் அது order qualifier எனப்படும்  நிகழ்வில் பங்குபற்றக்கூடிய தகுதி. ஆனால் order  winner எனப்படும் வெற்றிக்கான தகுதியை விஜய் ரீவியே தீர்மானித்தது. பல ஹிந்தி டப்பிங் நாடகங்கள் ஓடிக்கொண்டிருந்த காலம் மாறி பல கிராமிய நாடகங்களை விஜய் ரீவி தயாரிக்க ஆரம்பித்ததும் இந்தக்காலத்திலேயே இக்குறிப்பிட்ட காரணத்திற்காகவே நடந்தேறியது. நிற்க.

விஜய் ரீவியின் 2018-2019 இற்கான strategic plan ஆக நான் பார்ப்பது வெளிநாட்டில் குறிப்பாக தமிழ்மக்கள் அதிகம் வாழும் நாடுகளான கனடா, இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் தன் சந்தையை மேலும் விரிவாக்கி கொள்வது.
அதற்கான திட்டமிடலின் பகுதியாகவே, சூப்பர் சிங்கர் ஜூனியரில் சிங்கப்பூர் சூரியா ஆனந்த், இப்போதய சூப்பர் சிங்கரில் இங்கிலாந்து புண்ணியா,  மற்றும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து தர்ஷன் மற்றும் லாஸ்லியாவும் மலேசியாவில் இருந்து முகினும் உள்வாங்கப்பட்டிருந்தார்கள். இந்த நிகழ்ச்சியின் வெற்றியுடன் இந்த நாடுகளில் விஜய் ரீவியின் TRP எகிற வைப்பதற்கான அத்தனையும் இந்த பிக்பாஸில் நடந்தேறின. கிட்டத்தட்ட முடிவை நெருங்கிவிட்ட BB3 இல் யாரை வெற்றியாளராக்கவேண்டும் என்பதே இறுதியாக செய்யவேண்டியது.

இலங்கை அல்லது மலேசியாவை சேர்ந்த ஒருவர் என்று முடிவெடுத்திருந்தாலும் இதுவரை மலேசிய தமிழர்களுக்கு எந்த வெற்றியும் கொடுக்கப்படவில்லை என்ற அடிப்படையிலும், மலேசிய சந்தை எதிர்கால விஜய் ரீவி மேடை நிகழ்வுகளுக்கு ஒப்பீட்டளவில் இலங்கையை விட லாபமூட்டக்கூடியது என்ற வகையில் முகின் வெற்றியாரராக்கப்படக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளதாக நான் எண்ணுகிறேன். அதை செய்வதற்கு மிகப்பெரிய முட்டுக்கட்டை தர்ஷன். அவனை இனியும் வைத்திருந்தால் கடந்தவாரம் போல அத்தனை டாஸ்க்கிலும் அடுத்தவாரமும் அவனே ஜெயித்துவிடுவான். அதற்காக உழைப்பையும் அவன் கொட்டியிருக்கிறான்.
ஆக அவன் இருக்கின்ற மேடையில் முகின் வெற்றியாளராக அறிவிக்கப்படுவது அப்பட்டமான குற்றச்சாட்டுகளை கொண்டுவரக்கூடும் என்பதால் தர்ஷன் பலவந்தமாக வெளியேற்றப்பட்டிருக்ககூடும்.

 எல்லா ராஸ்க்கையும் சரியாக செய்யாததால் சேரனும் எல்லா ராஸ்க்கையும் சரியாகச்செய்தததால் தர்ஷனும் வெளியேற்றப்பட்ட அவலம் BB3 இல் நடந்தேறியுள்ளதாக அறியமுடிகிறது. நாளை எபிசோட் பார்க்கும் போதுதான் தர்ஷன் வெளியேற்றத்தின் உண்மைத்தன்மையையும் உலகநாயகன்(?) கமலின் சளாப்பலையும் கேட்கமுடியும்.

ஆக இறுதிமேடையில், சமவாய்ப்புகளோடு( மக்கள் ஓட்டு அடிப்படையில்) எஞ்சியிருக்கப்போகும் சாண்டி(தமிழ்நாடு), லாஸ்லியா( இலங்கை), முகின்( மலேசியா), செரீன்(கர்நாடகா), ஆகியோரிடையே முகின் வெற்றிவாப்பையே Vijay tv விரும்பினாலும், கவின் செய்தது போன்ற திடீர் நகர்வுகள் சிலவேளைகளில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்த முடிந்தால் வேறுவழியற்று வேறொருவரைகூட வெற்றியாளராக்கலாம். ஆனால் அத்தனைபேரும் வெற்றிக்கு தகுதிஉள்ளவர்களே. இது பிக்பாஸ் மட்டுமன்றி சூப்பர் சிங்கரில் கலக்கும் பலருக்கும் பொருந்தும்

 ஆக இன்றய சுயநல வியாபார உலகில் "முடிவெடுப்பவனாக நீ இருந்தால் மட்டுமே உன் வெற்றியை உறுதி செய்யமுடியும்" என்பது மறுபடியும் நிரூபனமாகியுள்ளது.
கவினின் மக்கள் மனங்களில் ஒரேநாளில் சிம்மாசனம் போட்டமரவைத்த சிறப்பான காய்நகர்த்தலும்  தர்ஷன் பிக்பாஸையும் கமலையும் நம்பிக்கோட்டை விட்ட கிண்ணமும்
"ஒன்றில் உன் திட்டத்தில் நீ இருக்கவேண்டும் இல்லையேல் இன்னொருவன் திட்டத்தில் நீ இருப்பாய்" என்று நான் நம்பும் ஒரு கோட்பாட்டை மறுபடியும் நிறுவியுள்ளது.

-தயா

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-