News Update :

Thursday, September 26, 2019

TamilLetter

ஐக்கிய தேசிய கட்சியின் இறுதி தீர்மானம்



ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ போட்டியிடவுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் நவீன் திஸநாயக்க தனது உத்தியோகப்பூர்வ முகப்புத்தகத்தில் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு அனைத்து தரப்பினரும் இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் விசேட செயற்குழு கூட்டம் இன்று மாலை 3 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ போட்டியிடவுள்ளமை குறித்த உத்தியோகப்பூர்வ அறிவித்தல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-