ஏ.எல்.நஸார்
எதிர் வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் சமூகம் யாருக்கு ஆதரவு வழங்க வேண்டுமென்பதில் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டிய காலமிது.
கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சிமாற்றத்துக்கு சிறுபான்மை சமூகங்கள் பாரிய பங்களிப்பை வழங்கியிருந்த போதிலும் நல்லாட்சி அரசாங்கம் முஸ்லிம்களின் கோவணத்தை கழற்றி விரட்டியடித்த வரலாற்றை எழுதியுள்ளது
2005,2010ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில்; பெரும்பான்மை சமூகத்தினரால் நிராகரிக்கப்பட்ட வேட்பாளருக்கு முஸ்லிம் சமூகம் பொரும்வாரியான ஆதரவை வழங்கி நாம் தோற்றுவிட்டு மீண்டும் வெற்றி பெற்ற வேட்பாளரின் அரசாங்கத்தில் ஒட்டிக் கொண்டு கட்சியையும் தலைமையையும் பாதுகாத்த கதைகளை இன்னும் யாரும் மறந்துவிடவில்லை.
இம்முறை அதே போன்றதொரு நிலைமை முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ளது.ஆரம்பிக்கும் முன்னே நமது ஆதரவை வெளிக்காட்டிக் கொண்டிருப்பது நமது சமூகத்துக்கு ஆரோக்கியமானதல்ல என்பதை அரசியல் தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஐக்கிய தேசியக் கட்சி மூன்று பிரிவுகளாக பிளவுபட்டிருக்கின்ற இந் நிலையில்.அக்கட்சியின் தலைவர் ரணில் தன்னை நிலைநிறுத்தியே சகல திர்மானங்களையும் மேற்கொண்டு வருவது தொடர்ச்சியான முரண்பாட்டையும் பின்னடைவையும் சந்தித்து வருகின்றது.
பெரும்பான்மை சமூகத்தில் கோட்டபாயவுக்கு எத்தனை விழுக்காடு; வாக்குகள் உள்ளது என்பதை பரிசிலனைக்கு உட்படுத்துவது ஆரோக்கியமானதொரு விடயமாக உள்ளது.அது மாத்திரமன்றி நமது பிரதேசத்தின் சூழலுக்கு ஏற்றவாறு வேட்பாளர்களின் செல்வாக்கை கணிப்பது மீண்டும் நமக்கான ஏமாற்றமாக அமைந்து விடக் கூடும்.
பெரும் அரசியல் பின்னணியில் உள்ள கோட்டபாயவுக்கு ஈடுகொடுக்க கூடிய வேட்பாளர் எதிரணியில் யாரும் இல்லாத நிலையில் சஜித் பிரமதாஸவை களமிறக்குவது ஜனாதிபதி தேர்தலை ஓரளவு உக்கிரப்படுத்தமுடியும்.
ஆனால் சஜீத் பிரமதாஸாவை தவிர்த்து விட்டு கோட்டாவுக்கு எதிராக வேறு யாராவது களமிறக்கப்பட்டால் முஸ்லிம் சமூகம் கோட்டாவுக்கு ஆதரவு வழங்குவதே புத்திசாலித்தனமானது என முகாவின் உள்ளராட்சி சபை உறுப்பினர்கள் மற்றும் அதன் உயர்பீட உறுப்பினர்களும் பொது வெளியில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றமை கோட்டாவின் ஆளுமைக்கு சான்றாகும்
இதற்கு ஒரு படிமேல் சென்ற சில உறுப்பினர்கள் ஒருவேளை கட்சி ரணிலுக்கு ஆதரவாக செயற்பாட்டால் நாங்கள் கோட்டாவுக்கு ஆதரவாக செயற்படுவோம் என பகிரங்கமாக கூறி வருவது தனது கட்சியின் தலைமை மீது நம்பிக்கையற்றவர்களாகவே பார்க்க முடியும்.