அம்பாரை மாவட்டத்தில் வீடமைப்பு அதிகார சபையினால் கட்டி முடிக்கப்பட்ட கிராமிய வீட்டுத்திட்டத்தை திறந்து வைக்கும் நிகழ்வும் புதிய பயனாளிகளுக்கு வீடு அமைப்பதற்கு காசோலையும் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் வீடமைப்பு அமைச்சர் சஜீத் பிரமதாஸா பிரதம அதிதியாக கலந்து கொண்டு வீட்டுத் தொகுதியை திறந்து வைத்ததுடன் இதன் பிற்பாடு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் வைத்து காசோலைகளை பயனாளிகளுக்கு வழங்கி வைத்துக் கொண்டிருந்தார்.
அம்பாரை மாவட்ட கரையோரத்தைச் சேர்ந்த முஸ்லிம் பயனாளிகள் காலை 8மணிமுதல் நிகழ்வு நடைபெறும் இடத்திலிருந்து காத்துக் கொண்டிருந்தனர்.
பல மணித்தியாலங்கள் கடந்து விட்டநிலையிலும் தூர இடத்திலிருந்து வந்த இப்பயனாளிகளுக்கு காசோலைகளை வழங்காமல் பெரும்பான்மை சமூகத்தினருக்கே வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது.
இப்படியான சந்தர்ப்பத்தில் காசோலை வழங்கப்படும் பெயர்ப்பட்டியலில் குறிப்பிட்ட நபர்களின் பெயர்கள் உள்வாங்கப்பட்டுள்ளதா? என்ற சந்தேகம் எல்லோர் மனதிலும் எழுந்துள்ளது.
இது விடயமாக மேடையில் இருந்த எமது பிரதேசத்து அமைப்பாளரிடம் முறையிடப்பட்ட போது அவர் அமைச்சர் சஜீத்திடம் சென்று நான் அழைத்து வந்தவர்கள் தூர இடத்திலிருந்து வந்துள்ளார்கள் அவர்களை அழைத்து காசோலைகளை வழங்கி வையுங்கள் என்றிருக்கார்.
இதைக் கேட்ட அவர் கடும் கோபத்தோடு நமது பிரதேசத்து அமைப்பாளரை அநாகரிகமற்ற முறையில் உடல்ரீதியான பாஷையிலும் வார்த்தைகளாலும் கடும் தொனியில் திட்டியுள்ளார்.
இச் சம்பவத்தை அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் மிகவும் கவலையுடன் எம்மிடம் தெரிவித்தார்