News Update :

Monday, September 2, 2019

TamilLetter

மேயரை புறக்கணிக்கும் மாநகர சபை உறுப்பினர்கள்

  


கல்முனை மாநகர சபையின் ஆட்சியை முஸ்லிம் காங்கிரஸ் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய இரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அதிகாரத்தை தன்னகப்படுத்தியுள்ளது.

அதன் பிராகரம் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக சட்டத்தரணி ஏ.எம்.றகீப் மாநகர சபையின் மேயராக பதவி வகித்து வருகின்றார்.

இப்படியான சூழ்நிலையில் முஸ்லிம் காங்கிரஸின் மாநகர சபை உறுப்பினர்களுக்கும் மேயருக்குமிடையிலான முரண்பாடு அதிகரித்து காணப்படுவதுடன் மேயரை கணக்கில் எடுக்காமல் உறுப்பினர்கள் தமது செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாக பல குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இதற்கு உதாரணமாக கல்முனை பிராந்தியத்தில் முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களின் நிதியொதுக்கீட்டின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட பல வீதிகளின் பெயர்ப்பலகைகளில் மாநகர சபையின் முதல்வரின் புகைப்படம் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளது.

மாநகர சபை முதல்வரின் அனுமதியில்லாமல் எந்தவிதமான அபிவிருத்தி திட்டங்களையும் மேற்கொள்ள முடியாத சந்தர்ப்பம் இருந்தும் இவற்றையெல்லாம் பெரிதுபடுத்தாமல் கல்முனை பிரதேசம் அபிவிருத்தியடைய வேண்டுமென்பதில் மட்டும் கவனம் செலுத்தும் முதல்வரை பாராட்டாமல் இருக்கமுடியாது.



TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-