News Update :

Saturday, August 10, 2019

TamilLetter

பிரதேச சபையின் உறுப்பினர் ஏ.எம்.எம்.தாஜ்ஜூதீன் அவர்களின் வாழ்த்துச் செய்தி



ஈத்துல் அழ்ஹா புனித ஹஜ்ஜூப் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து உலகவாழ் முஸ்லிம்களுக்கும் தனது பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்  என்று பொத்துவில் பிரதேச சபையின் உறுப்பினர் ஏ.எம்.எம்.தாஜ்ஜூதீன் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்

முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காக எவ்வாறு இப்றாஹீம் நபி உள்ளிட்ட நபி மார்களும் அவர்களைப் பின்பற்றிய மக்களும் சோதிக்கப்பட்டார்களோ அதே காரணத்திற்காக இன்று உலகம் பூராவும் பல்லாயிரக்காணக்கான முஸ்லிம் மக்கள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அதே போன்று நமது நாட்டில் வாழுகின்ற சிறுபான்மை முஸ்லிம்கள் பெரும் தேசியவாதிகளின் அடக்குமுறைக்கு அகப்பட்டு தமது அடிப்படை உரிமைகளை இழக்க வேண்டிய தருணத்தில் நாம் இருந்து கொண்டிருக்கின்றோம். இப்படியான சூழ்நிலையில் நாம் பிரிந்து சென்று விடாமல் ஒற்றுமைப்பட்டு நிற்பதே எமக்கான பலமாக உள்ளது.

ஆகவே எமது துஆக்கள் அங்கீகரிக்கப்படுவதற்கு ஏற்ற ஒரு தினமாக இன்றைய தினம் அமைந்துள்ளதனால் இன்று பெருநாளினைக் கொண்டாடக் கூடிய அனைவரும்இ புனித ஹஜ் கடமையில் ஈடுபட்டுள்ள ஹாஜிகளும் எமது சகோதர உறவுகளுக்காக துஆ பிராத்தனைகளில் ஈடுபடக்கூடிய ஒரு சந்தர்ப்பமாக இந்நாளினை அமைத்துக்கொள்ள வேண்டும்.

மேலும் முஸ்லிம்களாகிய நாம் இப்பெருநாள் கொண்டாட்டங்களின் போது மார்க்கத்திற்கு முரணான வீணான காரியங்களில் ஈடுபடுவதுஇ ஏனைய சமூகங்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது வீணான செலவுகளில் ஈடுபடுவது போன்ற விடயங்களில் இருந்து முற்றாகத் தவிந்து நடக்க வேண்டும்.

எமது மார்க்கம் எமக்கு கற்றுத்தந்த வழிமுறையினை பின்பற்றி இந்த பெருநாள் கொண்டாட்டங்களை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு இன்றைய தினம் புனித ஹஜ் பெருநாளினைக் கொண்டாடக்கூடிய அனைத்து உலகவாழ் முஸ்லிம்களுக்கும் புனித  ஹஜ் பெருநாள் நழ்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-