அம்பாரை மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 2019.07.29 ஆந் திகதி அம்பாரை கச்சேரியில் இடம்பெற்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான வருடாந்த இடமாற்ற சபையால் ( குறிப்பாக இடமாற்ற சபைத் தலைவர், மேலதிக அரசாங்க அதிபர் திரு.V. ஜெகதீசனால்) வழங்கப்பட்ட இடமாற்றம் மொத்தம் 46 உத்தியோகத்தர்கள். அதில் 40 உத்தியோகத்தர்கள் முஸ்லிம்கள். தமிழ் இன உத்தியோகத்தர்கள் 6 பேர் மட்டுமே. சிங்கள உத்தியோகத்தர்கள் ஒருவருமே கிடையாது 0.
அம்பாரை மாவட்ட இன விகிதாசாரப்படி பார்த்தாலோ அல்லது உத்தியோகத்தர்களது விகிதாசாரப்படி பார்த்தாலோ இவ்வாறு 40 :6:0 என்ற அடிப்படையில் முஸ்லிம்கள் பாதிக்கப்படமாட்டார்கள்.]
மேலும் இடமாற்றம் என்பது முஸ்லிம் உத்தியோகத்தர்களுக்கு மாத்திரம் தானா எழுதப்பட்ட சாசனம் என்ற பாரிய சந்தேகம் உருவாகியிருக்கின்றது.
பல நூற்றுக்கணக்கில் சிங்கள தமிழ் முஸ்லிம் உத்தியோகத்தர்கள் கடமையாற்றும் இம்மாவட்டத்தில் எவ்வாறு முஸ்லிம் உத்தியோகத்தர்கள் மாத்திரம் இலக்கு வைக்கப்பட்டு பழிவாங்கப்பட்டிருக்கிறார்கள் என்று பாருங்கள்? அதுவும் சில தமிழ் உத்தியோகத்தர்களுக்கு அருகிலுள்ள அலுவலகமும் முஸ்லிம்களுக்கு மிகவும் தொலைவான இடங்களும் வழங்கப் பட்டிருக்கிறது.
எமது சமூகத்திற்குள் நாமெல்லாம் குழுச் சண்டை பிடித்துக்கொண்டிருக்கும் போது எதிர் சமூகத்தைச் சேர்ந்த சில கொடூர இனவாதிகள் நம்மை மொத்தமாக தாக்க முற்படுகிறார்கள்.
முஸ்லிம் சமூகத்தை மேலும் ஓரங்கட்டுமுகமாகவே இந்த கொடூர இனவாத விடயம் அரச துறையில் இடம்பெற்றிருக்கிறது.
இந்த அநியாயத்திற்கெதிராக அம்பாரை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிற்சங்கம் அமைச்சு மட்டத்திற்கு முறைப்பாடு செய்துள்ளதாக அறியக்கிடைக்கிறது. மாத்திரமன்றி, இவ்வாறான இனவாத வெறிபிடித்த அதிகாரிகளுக்கெதிராக நடவடிக்கை எடுக்க சகல முஸ்லிம் சமூக அரசியல்வாதிகள், சமூக சிந்தனையாளர்கள் மற்றும் புத்திஜீவிகள் உடனடியாக முன்வர வேண்டும்