News Update :

Friday, August 16, 2019

TamilLetter

அம்பாரை விவசாயிகளுக்கு நஷ்டஈட்டுத் தொகை


நுபையில்

 

 2018ம் ஆண்டு ஏற்பட்ட கடும்  வரட்சியால் சிறுபோக விவசாய்கள் தமது வாழ்வதாரத்தை இழந்து நின்றனர்.

இப்படியான நிலையில்  பாதிக்கப்பட்ட  விவசாய்களுக்கு அரசாங்கம் பாரியளவில்   நஷ்டஈட்டுக் கொடுப்பணவை நாடு முழுவதும் வழங்கி வருகின்றது.

 இதன் அடிப்படையில் அம்பாரை மாவட்டத்தில் கடந்த வருடம் சிறுபோகத்தில் பாதிக்கப்பட்ட   346 விவசாய்களுக்கு  விவசாயிகளுக்கு நஷட்டஈட்டுத்தொகை இன்று வழங்கி வைக்கப்பட்டது.

 அம்பாரை மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளரின் தலைமையில்  இன்று நடைபெற்ற இந் நிகழ்வில் விவசாய  அமைச்சர் பி.ஹரிஸன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட விவசாய்களுக்கு சுமார் 16 மில்லியன் ரூபா நிதியை வழங்கி வைத்தார்.

இதன் போது அமைச்சர்களான தயா கமகே,சிரானி,பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில்,எம்.ஐ.எம்.மன்சுர்,கோடிஸ்வரன் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.




TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-