News Update :

Saturday, August 10, 2019

TamilLetter

பிரதேச சபையின் உறுப்பினர் ஏ.எஸ்.எம்.உவைஸ் விடுத்துள்ள ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச் செய்தி




உலக முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க இத் தியாக திருநாளில் நாம் பிரத்திக்க வேண்டுமென அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினர் ஏ.எஸ்.எம்.உவைஸ் விடுத்துள்ள ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


அவரது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது புனித மக்கமா நகரில் தியாகத்தை நினைவூட்டும் வகையில் ஒன்று கூடியுள்ள அனைத்துலக மக்களும் எந்த விதமான பேதமுமின்றி இறையோனின் கட்டளைக்கு அடிபணிந்து பிரார்த்தனைகளிலும், தொழுகைகளிலும், நல்லமல்களிலும் ஈடுபட்டுள்ளார்கள்.

குறிப்பாக ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜூப் பெருநாள் தியாகத்தை நினைவு கூறுக்கின்ற ஒரு திருநாளாகும். ஏனைய சமூகங்களுக்கு மத்தியில் நாம் எமது இஸ்லாமிய விழுமியங்களையும், சிறந்த பண்புகளையும் வெளிப்படுத்த வேண்டும்.

குறிப்பாக தியாகத்தோடு நாங்கள் தியாகத்தைச் செய்து ஏனையவர்களுடன் வாழுக்கின்ற ஒரு சூழலை எம்மத்தியில் எமக்குள்ளே உருவாக்கிக் கொள்கின்ற ஒரு தியாக மனப்பாங்கை உருவாக்குகின்றதுதான் இந்த ஹஜ்ஜூப் பெருநாளாகும்.



இன்று நம்நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற அமைதியான சூழலும் சமாதானமும், இன ஒற்றுமையும் தொடர்ச்சியாக தொடர வேண்டும். நாம் அனைவரும் நிம்மதியோடும் ஒற்றுமையோடும் வாழ்வதற்காக அல்லாஹ்விடத்தில் பிராத்திப்போமாக.






TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-