News Update :

Saturday, August 10, 2019

TamilLetter

பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எம்.அமீன் விடுத்துள்ள ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்து செய்தி



இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் இறுதியான ஹஜ்ஜூப் கடமையை தொடர்ந்து முஸ்லிம்கள் 'ஈதுல் அழ்ஹா' எனப்படும் தியாகத் திருநாளை கொண்டாடும் வேளையில், உலகளாவிய ரீதியிலும் உள்நாட்டிலும் எதிர்நோக்கப்படும் சவால்களுக்கு துணிச்சலோடு முகம்கொடுத்து அவற்றை முறியடித்து வெற்றிபெற எல்லாம் வல்ல அல்லாஹ்வை இறைஞ்சுவோமாக' என்று அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினர் எஸ்.எம்.அமீன் தெரிவித்தார்.

 இறைவனின் கட்டளைக்கு அடிபணிந்து தனது அருமை மகனையே அறுத்துப் பலியிடத் துணிந்த இப்ராஹீம் நபி அவர்களின் தியாகத்தை நினைவுபடுத்தும் விதமாக உலக முஸ்லிம்கள் ஹஜ் பெருநாளைக் இன்று கொண்டாடுகிறார்கள்.


உலகில் வாழும் முஸ்லிம்கள் தான் உழைத்து சம்பாதித்த பணத்தில் ஒரு தொகையை இறை வழியில் செலவழித்தும் புனித மக்கா நகரிற்குச் சென்றும் இறை வழிபாடுகளில் ஈடுபடுவதன் பிரதான நோக்கம் இறை நேசத்தையும் இறை பொருத்தத்தையும் பெற வேண்டும் என்பதற்காகவேயாகும்.
 
இன,மத, நிற, குல பேதங்களுக்கு அப்பால் அனைவரும் ஒன்றிணைந்து நிறைவேற்றப்படும் இப்புனித கடமையினை, இஸ்லாம் சர்வதேச மாநாடாகவும் சுட்டிக்காட்டுகிறது. இதன் மூலம் இஸ்லாத்தில் கடும் போக்கிற்கோ, இன வாதத்திற்கோ இடம் இல்லை என்பதனையும் இந்த தியாகம் எடுத்துக்காட்டுகிறது.
 
சமூக ஒற்றுமைக்காக அனைவரும் சகோதர மனப்பாங்குடன் ஒன்றிணைந்து மனிதத்துவத்தை உலகில் நிலை நாட்டுவதற்காக புனித மக்கா நகரில் பிரார்த்தனையில் ஈடுபடும் ஹஜ்ஜாஜிகளுக்கு சக்தியும், உடல் ஆரோக்கியமும் கிடைக்க வேண்டும் என பிரார்த்திப்பதுடன் இன்றைய தினம்ஈதுல் அழ்ஹாபுனித ஹஜ்ஜூப் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து முஸ்லிம்களுக்கும் புனித தியாகத் திருநாளாக அமைய வேண்டும் என பிரார்த்திக்கின்றேன்.

இந்த நன்னாளில் எல்லா சமூகங்களுடனும் ஒற்றுமையுடனும் சந்தோஷமாகவும் எவ்வித அச்சமுமின்றி சுதந்திரமாகவும் வாழ எல்லாம்வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள்புரிய வேண்டும் எனப் பிரார்த்திப்பதோடு, இந்த நன்னாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் அனைத்து நெஞ்சங்களுக்கும் எனது இனிய ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-