அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் அவர்களுக்கு அக்கரைப்பற்று பிரதேசத்தில் அமை;துள்ள பள்ளிவாசல்கள் அவரின் சேவையை பாராட்டி பெபரும் வரவேற்பளித்தனர்.
அமைச்சர் ரிஷாட் பதியூதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.இஸ்மாயில் ஆகியோரது நிதியொதுக்கீட்டில் பல்வேறு வகைப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
அதில் ஒர் அங்கமாக பள்ளிவாசல்களின் கட்டுமாணப்பணிகளுக்கு நிதியொதுக்கீய பாராளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நேற்று அக்கரைப்பற்றில் இடம்பெற்றது.
அதன் அடிப்படையில் அக்கரைப்பற்று ஹூதா பள்ளிவாசல் மற்றும் காதிரியா ஜூம்மா பள்ளிவாசல்களின் அழைப்பையேற்று விஜயம் செய்த போது அப்பள்ளிவாசல் நிருவாகத்தால் வரவேற்பளிக்கபட்டது.
காதிரியா ஜூம்மா பள்ளிவாசல் தலைவரும் மாநகர சபை உறுப்பினருமான அஸீஸ் மரைக்கார் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அக்கரைப்பற்று அமைப்பாளர் ஏ.எஸ்.அப்துல் பாஸீத் உட்பட பல பேர் கலந்து கொண்டனர்.