எம்.ஏ.சி.நுபையில் - கொழும்பிலிருந்து
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாரை மாவட்டத்தில் கால்பதித்து சுமார் ஐம்பதாயிரம் வாக்குகளை தன் வசப்படுத்திய நிலையில் மீண்டும் அவ் எண்ணிக்கையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற செயற்திட்டத்தில் அக்கட்சியின் தலைமை அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இத்திட்டத்திற்கு அமைய இளைஞர்களை கட்சியினுள் உள்வாங்குவதோடு கட்சியின் செயற்திறனோடு செயற்படுகின்ற இளைஞர்களுக்கு உரிய பொறுப்புக்களை வழங்க வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் ரிஷாட் பதியூதீன் உணர்ந்துள்ளார்.
அந்தடிப்படையில் அக்கரைப்பற்று பிரதேசத்தில் தனது கட்சிக் கொள்கைகளை தெளிவுபடுத்தி அம்மக்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இவ் வேலைத்திட்டத்தை முறையாக அமூல்படுத்துவதற்கு கட்சியின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் அவர்களால் அப்துல் சமட் அப்துல் பாஸீத் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான கலந்துரையாடல் இன்று காலை(28) அமைச்சரின் கொழும்பு இல்லத்தில் இடம்பெற்ற போதே இவருக்கான பொறுப்புக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.