உலகும் முழுவதும் ஏகமாய் காக்கும் வல்லான் இறையே வான்புகழ் அல்லாஹ்
இறைவனை நம்புவதும் அவனை வணங்குவதும்,அவனுக்காக எந்த தியாகத்தையும் செய்வதும் இறை நம்பிக்கையின் அடையாளமாகும்.
மனிதனை கெடுக்கும் பேராசை,பொறாமை,அகங்காரம்,ஆணவம்,பகைமை போன்ற பாவக் கறைகளை விட்டு மனித மனங்களை சுத்தப்படுத்துவதற்குறிய உயரிய நாளாகவே இத்தினம் பார்க்கப்பட வேண்டும்
வன்முறை,சமூக சீர்கேடுகளை புறந்தள்ளி மானிடநேய மாண்புக்குரிய பன்புகளையும்,நல்லிணக்கத்தையும் நிலை நிறுத்துவது நம் ஒவ்வொருவருடைய கடமையாகும்.
இலங்கை முழுவதும் மதத்தை அடிப்படையாக கொண்டு பிரிவினை வாதம் தலைதூக்கியுள்ள இந்த சூழ்நிலையில் முஸ்லிம்களாகிய நாம் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்ற உணர்வோடு ஒற்றுமையாக இணைந்து வாழ்வதே இன்றைய காலத்தின் தேவையாகும்.
ஏத்தனையோ முஸ்லிம் சகோதரர்கள் இப்புனித ஹஜ்ஜூப் பெருநாளை கொண்டாட முடியாமல் இஸ்லாத்திற்கு எதிரானவர்களால் முடக்கப்பட்டுள்ளார்கள் இவர்களுக்காக இப்புனித தினத்தில் இறைவனிடம் அவர்களின் சக வாழ்வுக்காக துஆ கேட்போம்.