MAC. நுபைல்
அக்கரைப்பற்று பிரதேசத்தில் விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் விளையாட்டுக் கழகங்களின் கொள்ளளவை அதிகரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அந்த அடிப்படையில் முதற்கட்டமாக றோயல் கிங் விளையாட்டுக் கழகத்தின் கிரிக்கட் வீரர்களுக்கு மேலங்கிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டன.
மேலங்கி வழங்கும் நிகழ்வு ஊடகவியலாளர் எம்.பி.றபீக் தலைமையில் இன்று (18) அக்கரைப்பற்றில் இடம் பெற்றது.
இதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அக்கரைப்பற்று அமைப்பாளர் ஏ.எஸ்.அப்துல் பாஸீத் பிரதம அதிதியாக கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களிடம் மேலங்கிகளை கையளித்தார்.