News Update :

Friday, August 16, 2019

TamilLetter

இஸ்மாயில் எம்.பி இன்று அக்கரைப்பற்றுக்கு விஜயம்






ஊடகப்பிரிவு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அக்கரைப்பற்று செயற்பாட்டாளர் ஏ.எஸ்.அப்துல் வாஸீத் அவர்களின் அழைப்பின் பெயரில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் அவர்கள் இன்று அக்கரைப்பற்றுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

கட்சியின் தேசியத் தலைவர் ரிஷாட் பதியூதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் ஆகியோரின் நிதியொதுக்கீட்டின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்திட்டங்களை இவ் விஜயத்தின் போது பார்வையிடவுள்ளார்.

அத்தோடு அக்கரைப்பற்று காதிரியா ஜூம்மா பள்ளிவாசல்,புதுப்பள்ளிவாசல்,மஸ்ஜிதுல் ஹூதா பள்ளிவாசல்களின் அழைப்பை ஏற்று அங்கு நடைபெரும் வேலைத்திட்டத்தை பார்வையிடுவதுடன் பள்ளிவாசல் நிர்வாக சபையுடனும் கலந்துரையாடலிலும் ஈடுபடவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அப்துல் வாஸீத் அவர்களின் தலைமையில் நடைபெறவிருக்கின்ற கட்சி ஆதரவாளர்கள் வட்டார தலைவர்கள் மற்றும் கட்சி முக்கியஸ்தர்களோடு கட்சியின் எதிர்கால நடவடிக்கை தொடர்பான கூட்டத்திலும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்.


TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-