News Update :

Wednesday, August 14, 2019

TamilLetter

பின்தங்கிய மண்ணில் பிரகாசிக்கும் நட்சத்திரங்கள் : குடுவில் மண்ணில் திறமையான வீரர்கள் !!
அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம் பிரதேசத்தில் சுமார் 200 குடும்பங்கள் வாழும் சிறிய ஊரே குடுவில். இந்த பிரதேச மக்களின் கனவுகளில் ஒன்று அண்மையில் நினைவானது. 

கரும்பு விவசாயம், மீன்பிடி, பீங்கான் கூட்டுதாபன தொழில்களை தமது ஜீபோனபாயமாக கொண்டு  தம்முடைய  வாழ்க்கையை கொண்டு செல்லும் இந்த மக்களின் பொழுது போக்கு மற்றும் திறமைகளை பட்டைதீட்டும் ஒரு முக்கிய குறைபாடாக பல தசாப்தங்களாக இருந்து வந்த மைதானம் ஒன்றின் தேவைக்காக போராடிய இப்பகுதி மக்களின் தேவை கடும் பிரச்சினைகளை சந்தித்த வந்தனர். அப்போது பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் கௌரவ ஹரீஸ் எம்.பியினால் அந்த மைதான கனவு கைகூடியது. 

அப்போதைய அரச முயற்சியாண்மை கண்டி அபிவிருத்தி பிரதியமைச்சராக இருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் இலங்கை பீங்கான் கூட்டுதாபனத்தின் சொத்தாக இருந்த படர்ந்த காடு போன்று காணப்பட்ட இடத்தை அடையாளம் கண்டு  இலங்கை பீங்கான் கூட்டுதாபன தவிசாளரிடம் அப்பிரதேச மக்களுக்கு இருக்கும் தேவையை வலியுறுத்தி முன்வைத்த உத்தரவின் பேரில் அந்த நிலத்தை அப்பிரதேச மக்களுக்கு பீங்கான் கூட்டுதாபானத்தின் தவிசாளரால் நேரடியாக அடையாளப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டது.

 விளையாட்டு கழக பிரதிநிதிகளும், அப்பிரதேச மக்களும், ஊர் நலன்விரும்பிகளும் இணைந்து நிதி திரட்டி தமது சொந்த உடல் உழைப்பால் காடுவெட்டி களனி செய்வது போன்று கடுமையாக உழைத்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ், இறக்கமாம் பிரதேச சபை உறுப்பினர் ஜெமீல் காரியப்பர் ஆகியோரால் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்ட இயந்திர உதவிகளுடன்  இந்த மைதானத்தை சிரமதானப்படுத்தி ஒழுங்கான மைதானமாக மாற்றியமைத்தமையானது அந்த மக்களின் விடா முயற்சியையும் ஏனைய பிரதேசங்களுக்கான படிப்பினையையும் எடுத்து காட்டுகிறது.

அந்த மைதானத்தில் ஹஜ்ஜு பெருநாள்  நிகழ்வாக அம்பாறை மாவட்டத்தின் பலம்பொருந்திய 24 முன்னணி விளையாட்டு கழங்களை உள்ளடக்கி மின்னொளி கிரிக்கெட் சுற்றுபோட்டி ஒன்றை அண்மையில் நடத்தினர். அந்த சுற்றுபோட்டியில் அம்பாறை மாவட்ட முன்னணி கழங்களை வீழ்த்தி இறுதிவரை போராடிய குடுவில் பிரலியண்ட் பாய்ஸ் விளையாட்டு கழகம் வெற்றியாளர்களாக மாறியது மிக மகிழ்ச்சி. குறுகிய கால பயிற்சி, கடின உழைப்பு, விடாமுயற்சி என்பனவற்றின் மொத்த பயனாக அம்பாறை மாவட்டத்தின் மிகப்பலம் பொருந்திய பல அணிகளை வீழ்த்திய குடுவில் விர்லியண்ட் பாய்ஸ் விளையாட்டு கழகம் அப்பிரதேச கிரிக்கெட் விளையாட்டுக்கு புதிய நம்பிக்கையை தந்துள்ளது. 

இந்த புதிய மைதானத்தில் இடம்பெற்ற கிரிக்கட் போட்டிகளை பார்வையிட நள்ளிரவை அண்மித்தும் அப்பிரதேச விளையாட்டு வீரர்கள், கிரிக்கட் ஆர்வலர்கள், ரசிகர்களை தாண்டி சிறிய வயது முதல் வயது முதிர்ந்த பெண்கள் வரை மைதானத்தில் பார்வையாளர்களாக நின்றிருந்தனர்.

குறுகிய காலத்தில் விஸ்பரூப முன்னேற்றம் அடைந்த குடுவில் விளையாட்டு கழகங்கள் அந்த சுற்றுப்போட்டியில் ஒரே பந்து வீச்சு ஓவர்களுக்கு ஆறு ஆறு ஓட்டங்கள், நான்கு ஆறு ஓட்டங்கள் என குடுவில் வீரர்களால் குவிக்கப்பட்ட சாதனைகளும் நடைபெற்ற போது பார்வையாளர் அரங்கில் இருந்த இலங்கை பீங்கான் கூட்டுதாபன அதிகாரிகள் அந்த வீரர்களை மேற்கிந்திய வீரர்களுடன் ஒப்பிட்டு பேசும் அளவுக்கு அவர்களின் திறமை இருந்தது. 

மின்னொளி கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வுகள் கடந்த செவ்வாய்க்கிழமை அந்த மைதானத்தில் நடைபெற்றபோது வயது வித்தியாசம் இல்லாமல்  பட்டாசு வெடித்து, ஆரவாரமாக பிரதேச மக்கள் அந்த போட்டிகளை ரசித்தனர்.  இந்த பிரதேச மக்கள் விளையாட்டின் மீது வைத்திருக்கும் ஆர்வம் மிக ஆழமானது. 

மக்களின் ஆர்வத்தை அறிந்து இந்த மைதானத்தின் ஏனைய அபிவிருத்தி பணிகளை செய்து மைதானத்தை சிறந்தமுறையில் வடிவமைக்க அந்த நிகழ்வுகளுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதி தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்கள் 1.5 மில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளார். 

இதன் மூலம் இப்படியான பின்தங்கிய பிரதேச வீரர்களின் திறமைகள் இன்னும் சிறப்பாக பட்டை தீட்டப்பட்டு சிறப்பான வீரர்களை இலங்கைக்கு அடையாளம் காட்ட காலம் வரும் எனும் நம்பிக்கை துளிர் விட்டுள்ளதாக வீரர்கள் கருதுகின்றனர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-