News Update :

Sunday, August 11, 2019

TamilLetter

பொத்துவில் தொகுதி அமைப்பாளர் மஜீட் அகமட் அவர்களின் பெருநாள் வாழ்த்து செய்தி



இறைவனின் உன்னத படைப்பான மனிதனின் தியாகத்தையும் பொறுமையையும் பறைசாற்றும் இத்தியாகத் திருநாளில் எமது நாட்டில் நிலையான சமாதானம் ஏற்படுவதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் எனவும் அதற்காக இந்நன்னாளில் அனைவரும் பிரார்த்திக்குமாறும்  ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளரும் பிரதேச சபை உறுப்பினருமான மஜீட் அகமட் தனது ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தியாகத்தை அடிப்படையாகக் கொண்ட இம் மகத்துவமிக்க இப்பெருநாளை கொண்டாடும் அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கும் எனது மனப்பூர்வமான ஹஜ்ஜுப்  பெருநாள் வாழ்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமிதம் அடைகின்றேன்.

நமது அன்றாட செயற்பாடுகளை உளத்தூய்மையோடும் அல்லாஹ்வின் அருளுக்குரியதாகவும் தியாகத்துடனும் மேற்கொள்ளும் போதுதான் நல்லெண்ணத்தின் பேரிலான வெற்றியோ ஈடேற்றமோ எய்த முடியும். இதன் ஊடாகவேதான் நாட்டின் இன ஐக்கியத்தையும் சமாதானத்தையும் உருவாக்க முடியும். அவ்வாறு எமது நாட்டில் உருவாக்கப்படுகின்ற சமாதானத்திற்கும் ஐக்கியத்திற்கும் முஸ்லிம்களாகிய எமது பங்கு பிரதானமானதாக இருக்க வேண்டும்.


 இதேவேளை இன்றும் பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்கின்ற நமது சமூகம் நிம்மதியாக வாழ்வதற்கும் குறிப்பாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழும் எமது முஸ்லிம் சமூகம் இப்பெருநாள் தினத்தை நிம்மதியாகவும்  சந்தோசமாகவும் கொண்டாடி மகிழ இப்புனித திருநாளில் நாமனைவரும் இருகரமேந்தி பிரார்த்திப்போமாக.

 பல்லின சமூகத்தில் வாழும் இலங்கை முஸ்லிம்களாகிய நாம் சகோதர சமூகங்களுக்கு இடையூறுகள் ஏற்படாத வண்ணம் எம்முடைய பெருநாள் தினத்தை அமைத்துக்கொள்ள வேண்டும். எமது பெருநாள் கொண்டாட்டத்தில் ஏனைய சகோதர இன மக்களையும் இனைத்து சகோதரத்துவத்தை பேனிக்கொள்ள வேண்டும்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-