ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்து செய்தி
இறைவனின் கட்டளைக்கு அடிபணிந்து தன் மகனையே அறுத்து பலி கொடுக்க துணிந்த இறைத்தூதர் இப்றாஹீம்; (அலை) அவர்களின் உண்ணத தியாகத்தை உணர்த்தும் தினமே ஹஜ்ஜூப் பெருநாள்.
இப் புனித தினத்தை கொண்டாடும் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் எனது ஹஜ்ஜூப் பெருநாள் நல் வாழ்த்துக்கள்.
ஒரு இறைவனை வணங்கும் முஸ்லிம் சமூகம் இன்று உலகம் பூராகவும் சொல்லொன்ன துயரங்களோடு வாழ்ந்து வருகின்றனர்.
அதே போல் பல்லின சமூகங்கள் வாழும் இலங்கையில் சிறுபான்மையாக வாழுகின்ற முஸ்லிம்கள் மிகவும் அவதானத்துடன் கண்ணியமாக வாழவேண்டியது மிகவும் அவசியமாகும்.
எமக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரம் மற்றைய சமூகங்களின் மனங்களில் சங்கடத்தை ஏற்படுத்தாத வண்ணம் பார்த்துக் கொள்ளப்பட வேண்டும்.
ஒரு தீப்பொறி ஒரு காட்டையே அழிப்பது போன்று ஓர் இருவரால் செய்யப்படுகின்ற வெறுக்கத்தக்க செயற்பாடுகள் இந் நாட்டில் வாழுகின்ற ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதித்துவிடும் என்பதை மிகவும் கவலையுடனும் பொறுப்புடனும்; கூறிக் கொள்கின்றேன்.
எனவே இந்த புனித நாளில் சகோதர சமூகத்தினரின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதுடன் பல வழிகளிலும் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் சுதந்திரத்திற்காகவும் சக வாழ்விற்காகவும் இறைவனிடம் நானும் நீங்களும் பிரார்த்திப்போம்.