News Update :

Thursday, August 1, 2019

TamilLetter

புதிய அமைச்சும் - முஸ்லிம்களின் நிலையும்



பர்ஷாட் முகம்மட்


முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது அதனால்தான் நாங்கள் அமைச்சை எடுத்தோம் எனும் ஒரு கருத்தும்

அமைச்சரவையில் இருந்தால்தான் எங்களுக்கு வரும் ஆபத்தை தடுத்து விடலாம் என ஒரு சாராரின் கருத்தும்

 எங்களுக்கு இதுவரைக்கும் எந்த தீர்வையும் அரசாங்கம் பெற்றுத் தரவில்லை என்றும் காலம் காலமாக இருந்து வருகின்ற அடிப்படை உரிமைகளைக் கூடா பறிக்கப்பட்டு வருகின்றது என இன்னும் ஒரு சாராரும் கருத்தும் நிலவுகின்றது




இப்படியான நிலையில் மக்களின் கருத்துக்கள் இப்படி உள்ளது

அன்பான கட்சி தலைவர்களே:

முஸ்லிம்களின் எந்தப் பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிட்டு நீங்கள்  அமைச்சை மீளப் பெற்றுள்ளீர்கள் என்பதை முதலில் தெளிவுபடுத்த வேண்டும். ஏனென்றால் பயங்கரவாதத்தோடு தொடர்பு படாத பல பேர் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை இதற்கு உங்கள் பதில் என்ன?
முஸ்லிம்களின் அடிப்படை மார்க்க விடயங்கள் தொடர்பாக அரசாங்கம் கொண்டு வந்த சட்ட திருத்தங்களில் எதை நீங்கள் தடுத்துள்ளீர்கள் என்பதைக் கூற வேண்டும்.

முஸ்லிம்களின் காணிகளை மீட்டுத் தருகின்றோம் என கூறிய நீங்களும் ரணிலும் எந்த இடத்தில் எந்த காணியை மீட்டுள்ளீர்கள் என்பதை தெளிவு படுத்த வேண்டும்.

ஓவ்வொறு தேர்தல்களிலும் கரையோர மாவட்டம் பெற்றுத் தருவதாக ரணிலோடு ஒப்பந்தம் செய்து எங்களிடம் வாக்கு பெற்ற நீங்கள் அதை பெற்றுத் தந்துள்ளீர்களா?

மஹிந்த ஆட்சியில் ஏதோ ஒரு வகையில் வட்டமடு காணியில் இடைக்கிடை விவசாயம் செய்து வந்த நிலையில் நிரந்தரமாக விவசாயம் செய்யும் உரிமையை பெற்றுத் தருவதாக கூறிய நீங்கள் ஏற்கனவே இருந்த உரிமையையும் இந்த அரசாங்கத்தால் பறிக்கப்பட்டுள்ளதை என்னவென்று கூறுகின்றீர்கள்.

பொத்துவில் காணிப் பிரச்சினை,தனியான கல்வி வலயம்,நீரப்; பிரச்சினை தொடர்பாக உங்களின் வாக்குறுதிகள் என்னவாயிற்று.

சாய்ந்தமருதுக்கான தனியான நகர சபை வழங்குவதாக ரணிலின் வாயால் கூறவைத்த நீங்கள் கடந்த நான்கு வருடங்களாக அதை செய்ய முடியாமல் போனது உங்களுக்கு வருத்தமில்லையா?

வாழைச்சேனை பிரதேசத்தின் தனியான பிரதேச சபை மற்றும் காணிப் பிரச்சினைக்கு இதுவரையும் என்ன தீர்வை உங்களால் பெற முடிந்தது.
ஒலுவில் துறைமுக மண்அரிப்பு மற்றும் அம் மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு நீங்கள் தீர்வு கண்டதை கூற முடியுமா?

ஒலுவில் பிரதேசத்தின் பொது விளையாட்டு மைதானம் தொடர்பாக சுமார் 10 வருடங்களுக்கு மேலாக பேசி வருகின்றீர்களே உங்களால் ஒரு இஞ்சி நிலத்தைக் கூட பெற முடியாமல் போய்விட்டதே இது உங்களுக்கு எந்த சங்கடத்தையும் ஏற்படுத்தவில்லையா?

கல்முனையை துபாய் நகரம் போல் மாற்றப் போகின்றேன் என திட்டம் தீட்டியவர்கள் கொஞ்சம் சொல்லுங்கள் என்ன நடந்துள்ளது என்று.
வன்முறையால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு இதுவரைக்கும் எந்த நஷ்டஈடும் வழங்கப்படவில்லை என்பது உங்களுக்கு தெரியுமா?,

அத்தோடு அமைச்சரவையில் இருந்தால்தான் எதையும் சாதிக்க முடியுமென்றால் நீங்கள் இதுவரைக்கும் அமைசரவை கூட்டங்களுக்கு செல்வதில்லையா?

தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்த அமைச்சரவையில் உள்ளது என்பதை தெளிவுபடுத்த முடியுமா?

எதிர்கட்சி உறுப்பினர்களால் அபிவிருத்தி செய்ய முடியாது என்று நீங்கள் கூறினால் ஏன் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்ற தமிழ் பிரதேசங்களில்; பாரியளவில்  எப்படி அபிவிருத்தி நடைபெறுகின்றது என்பதை கூற முடியுமா?

மேலும் எதிர்க்கட்சியில் இருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ரணிலை ஆட்டம்காண வைக்க முடியுமென்றால் ரணிலோடு சுமார் 20 வருடங்களாக இணைந்து பயணிக்கும் உங்களால் ஏன் முடியாமல் போய்விட்டதற்கான வேறு காரணங்கள் இருக்கின்றதா?

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் போன்று உங்களிடத்தில் ஆளுமையான பாராளுமன்ற உறுப்பினர்கள் இல்லாததுதான் பிரதான காரணமாக கருதுகின்றறீர்களா?

அமிரலி இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுள்ளார் இதனால் மட்டக்களப்பில் உள்ள பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளதா? அல்லது இந்த அமைச்சின் மூலம் உடனடியாக தீர்க்க முடியுமா?

அதே போன்று திருகோணமலை முஸ்லிம்களின் பிரச்சினை துறைமுக பிரதியமைச்சை பெற்றதன் மூலம் தீர்க்க முடியுமா? ஏன்பதை மக்களுக்கு தெளிவு படுத்துங்கள்

எனவே சமூகத்திற்காகவும் சற்று சிந்தியுங்கள் அதைவிட்டு சமூகத்திற்காக சிந்திப்பவர்களை தடுக்காதீர்கள்


TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-