News Update :

Tuesday, July 2, 2019

TamilLetter

காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனையை நீர்த்துப்போகச் செய்த கூட்டமைப்பினர்!!பாராளுமன்றத்தில் கடந்த வருடம் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான
சட்டமூலம் வரும்போது எதிர்த்து பேசிவிட்டு வாக்கெடுப்பு வரும்போது ஆதரித்து வாக்களித்ததுடன்,ஐ.நா.மனித உரிமைப் பேரவையில் 2021 வரையும் காலநீடிப்பை பெற்றுக் கொடுத்தமை போன்ற விடயங்களை செய்து காணமல் போனவர்களின் போராட்டத்தை காட்டிகொடுத்தும் நீர்த்துப்போகவும் செய்துள்ள இவ் கூட்டமைப்பு குஞ்சுகள் சிலர் தமது மாநாட்டுக்கு முன் ஏன் போராட்டம் நடத்துகின்றீர்கள் இராணுவ முகாம்,டக்ளஸ்,சந்திரகுமார் போன்றவர்களின் இடங்களுக்கு முன் நடத்தவேண்டியதுதானே என்று கொக்கரிக்கின்றனர்.

காணாமல் போயுள்ள தமது அன்புக்குரியவர்கள் இரகசிய முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக நம்பும் போராட்டக்காரர்கள், அவர்களை தமக்கு காட்டும்படியும், அவர்கள் உயிருடன் இல்லை எனில் அதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும், என்று தினம் தினம் (900 நாட்கள் கடந்தும்) போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.ஆனால் தமிழ் மக்களின் பாதுகாவலனாக தம்மைத் தாமே காட்டிக்கொள்ளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நல்லாட்சி  அரசாங்கத்தை அதிகாரத்திற்கு கொண்டு வருவதற்காக, நேரடியாக ஆதரவளித்து அரசாங்கத்தின் பங்காளிகளாக இருந்து வருகின்றார்கள். 

இது இவ்வாறு இருக்க கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தமக்கு நீதி வேண்டும் என்றும் OMP வேண்டாமென்றும் உறவினர்கள் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் நோக்கில் ஓர் அமைதியான போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர் இவ் நேரத்தில் OMP வேண்டும் என தமிழ் அரசு கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் தீவிர ஆதரவாளர்கள் கோஷங்களை எழுப்பினார்கள். இதன் போது அங்கிருந்தவர்களுடன் முரன்பட்ட ஆதரவாளர்கள் தமது பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்தில் விவாதித்து கிளிநொச்சியில் OMP அலுவலகம் திறக்க முற்படுகின்றார்.நீங்கள் வேண்டாம் என கோஷம் போட வேண்டாம் என கூறி அப்போராட்டத்தில் கலந்து கொண்டவர்களையும்,பல்கலைக்கழக மாணவர்களையும், ஊடகவியலாளர்களையும் அச்சுறுத்தியும்,தாக்கவும் முற்பட்டனர்.

மேலும் காணமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் தொடர்பாக வடக்கு கிழக்கில் இருக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் எவ்வித ஆலோசனைகளையும் பெறாது தன்னிச்சையாக இவ் முடிவை எடுத்திருந்தனர்.

காணமல்ஆக்கப்பட்டோர் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கருத்துதெரிவிக்கும் போது அதிகமாக காணாமல் ஆக்கியவர்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் டக்ளஸ் மற்றும் சந்திரகுமார் என தெரிவித்திருந்தார்.ஆனால் பல கொலை,கொள்ளை, ஆட்கடத்தல்கள்,கப்பம் போன்றவற்றை செய்து 2009ல் யுத்தம் முடிவடைந்தும் 2012ம் ஆண்டளவில் இராணுவத்திடம் ஆயுதங்களை ஒப்படைத்தோம் என்று பகிரங்கமாக ஊடகங்களுக்கு தெரிவித்த சித்தார்த்தன்( புளெட்) தொடர்பாக இவர்கள் மேற்குறிப்பிட்ட சம்பவங்களுடன் தொடர்பு இல்லையென்று சிறிதரனோ அல்லது ஏனைய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பனர்களோ மறுக்க முடியுமா? இது இவர்களின் சந்தர்பவாத அரசியலை மிகத்தெளிவாக காட்டுகின்றது எனலாம்.மேலும் தொடர்ச்சியாக இலங்கை அரசை காப்பற்றி வருவதோடு காணமல் போனவர்களின் விவகாரத்தை நீர்த்துப்போக செய்வதற்கு அரும்பாடுபட்டவர்கள் கூட்டமைப்பினர்.

காணாமலாக்கப்பட்டோருக்கு எதிராக செயற்பட்டோரையும், இராணுவம்,புளெட்,உட்பட அனைவரையும் பாதுகாத்துக் கொண்டும்,கால நீடிப்பு வழங்கியும் அவர்களது பிரச்சனையை நீர்த்துப் போகச் செய்த கூட்டமைப்புக்கு எதிராக போராட வேண்டிய நிலைக்கு அந்த மக்களை தள்ளியவர்கள் கூட்டமைப்பினர்.இவர்களுக்கான தீர்வை அரசுக்கு முண்டு கொடுத்துக் கொண்டிருக்கும் கூட்டமைப்பினராகிய நீங்கள் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கெதிராக செயற்படாமல் விட்டால் போதும்.அந்த மக்களின் 900 நாட்கள் சாத்வீக போராட்டத்தில் ஒரு மணி நேரம் கலந்து கொண்டு ஒரு ஆறுதல் கூற முடியாத நீங்கள் யாருடைய பிரதிநிதிகள்.

அடிக்கடி போராடம் வெடிக்கும் என்று கூறும் மாவையோ அல்லது ஆயுதம் தூக்கியவர்கள் என்று கூறித்திரிபவர்களாலோ தமது பிள்ளைகளை பறிகொடுத்து தனி மரமாக நின்று போராடும் தாய்மாருக்காக போராடுவதற்கு பதிலாக இழிவுபடுத்திவிட்டு சொகுசு வாகனத்தில் திரும்பி பார்க்காமல் செல்வதை எந்தவொரு தமிழ் மகனும் இனிவரும் காலங்களில்; உங்களை மக்கள் பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. 

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-