சம்பளத்திற்காக வேலை பார்க்கும் அரச ஊழியர்கள் இருக்கும் காலகட்டத்தில் சமூக சேவையாக தமது கடமையை மேற்கொள்ளும் ஒரு நபராக அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் கணக்காளரை நான் பார்க்கின்றேன் என்று மௌலவி சமிம் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் அட்டாளைச்சேனை மக்களுக்கு பணியாற்றுவதற்காக பல பிரதேசங்களிலிருந்தும் அரச ஊழியர்கள் எம் மண்ணிற்கு வந்து பணியாற்றுகின்றனர்.சிலர் எப்படா வீடு சென்று விடலாம் என்று கடிகாரத்தை பார்த்துக் கொண்டிருப்பர் இன்னும் சிலர் வேலை நேரங்களில் தேனீர் கடைகளிலும் மற்றும் கைத்தொலைபேசியுடனும் தமது நேரத்தை வீனடிக்கின்றதை நாம் ஒவ்வொறு நாளும் பார்க்க கூடியதாகவுள்ளது.
இப்படியான சூழ்நிலையில் புதிதாக தனது பணியை பொறுப்பெடுத்த அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் கணக்காளர் ஏ.எல்.றிபாஸ் அவர்களை ஒரு சமூக சிந்தனையுள்ள இளைஞனாக நான் அவதானித்துள்ளேன்.
கடந்த ஆண்டு அரசாங்கத்தினால் பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த போதும் மக்களுக்கு தெளிவில்லாத முறையற்ற திட்டங்களாகவே அது காணப்பட்டது.ஒரு திட்டம் நடைமுறைப்படுத்தும் போது திட்டத்திற்கான நிதியின் விபரம் யாரால் வழங்கப்பட்டது?ஒப்பந்தக்காரர் யார்? என்பது தொடர்பாக விளம்பரப்பலகையில் காட்சிப்படுத்த வேண்டும். இப்படி காட்சிப்படுத்தப்படும் போதுதான் மக்கள் விழிப்பாக திட்டங்களை அவதனிப்பர் இதன் மூலம் ஊழல்களை தடுப்பதற்கான சந்தர்ப்பமாகவும் அது அமைகின்றது.
அத்தோடு சில அதிகாரிகள் தனக்கு கொமிஸன் வர வேண்டுமென்பதற்காக ஒப்பந்தக்காரர்களோடு முரண்பட்டு காலத்தை கடத்துவது பரவலாக பேசப்படுகின்றது.இதனால் திட்டத்தை அமுல்படுத்துபவர்கள் பெரும் கஷ்டங்களை அனுபவிப்பதுடன் உரிய நேரத்திற்கு திட்டத்தை நிறைவு செய்ய முடியாமல் தடுமாறுகின்றனர்.
கணக்காளர் றிபாஸ் பயனாளிகள் உச்ச பயனை அடை வேண்டுமென்பதில் கவனமாக இருப்பதுடன் ஒவ்வொரு திட்டங்களுக்கும் விளம்பரப்பதாகைகள் அமைப்பதில் ஆர்வம் காட்டி செயற்படுத்தியும் வருகின்றார்.அத்தோடு திட்டம் அமுல்படுத்தும் நபர்களின் நலன்களிலும் பாதிப்பு வரதவாறு பார்த்துக் கொள்வதோடு உரிய நேரத்திற்கு அலுவலக பணிகளை அவர் செய்து கொடுப்பதாக பல பேர் பாராட்டும் தெரிவிக்கின்றனர்.
அண்மையில் அட்டாளைச்சேனை ஜூம்மா பள்ளிவாசலில் இடம் பெற்றுவந்த புனரமைப்பு வேலைத்திட்டத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளை இலகுவாக தீர்த்து வைத்ததாக அந்த பள்ளிவாசல் நிர்வாகம் கணக்காளரை பாராட்டினர்.
அதே வட்டாரத்தில் இருக்கின்ற பாடசாலை மைதானத்தின் புனரமைப்பு வேலைத்திட்டங்கள் உரிய நேரத்தில் முடிக்கப்படாமலும் முறையற்ற விதத்தில் செயற்திட்டம் நடைமுறைப்படுத்தியதாலும் விளையாட்டு வீரர்கள் அம் மைதானத்தில் பல மாதங்கள் விளையாட முடியாமல் இருந்த நிலையில் இப்பிரச்சினையை கணக்காளர் றிபாஸிடம் முறையிட்ட போதுதான் அதற்கான தீர்வு கிடைத்தது என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்
இப்படியான அரச ஊழியர்கள் காலங்களை கணக்கில் எடுக்காமல் வேலை செய்யும் போதுதான் அரசை நம்பியிருக்கும் மக்கள் நன்மையடைவார்கள் என சமிம் மேலும் தெரிவித்தார்