News Update :

Sunday, July 21, 2019

TamilLetter

தேசிய நீர் வழங்கல் பிராந்திய காரியாலயம் அக்கரைப்பற்றில் அதிகார துஷ்பிரயோகம் நடை பெறுகிறதாக கூறப்படுகின்றது.



தேசிய நீர் வழங்கல் பிராந்திய காரியாலயம் அக்கரைப்பற்றில் அதிகார துஷ்பிரயோகம் நடை பெறுகிறதாக  கூறப்படுகின்றது

இங்கு கடமை செய்பவர்கள் சுமார் 11வருடங்களாக உள்ளனர் இவர்களுக்கு வரும் இடமாற்றத்தை ஒருசாரார் அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகளை பயன்படுத்தி அதை தடுக்குகின்றார்கள்.

இன்னுமொருசாரார் தங்களை அரசியல் பழிவாங்கல் செய்கின்றனர் என்று கூறி இடமாற்றத்தை தடை செய்கின்றனர் இவர்கள் வெளி இடங்களில் இருந்து வரும் சக ஊழியர்கள் வராமல் தடுப்பதும் காரியாலய நேரத்தில் இவர்களின் தனிப்பட்ட வெளி வேலைகளை செய்கின்றனர் 

இதில் சிலர் கணக்குபரிசோதகரரிடம் ( Audit) பிடிபட்டு அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி அதிலும் தப்பித்துக்கொண்டிருக்கின்றார்கள் இன்னும் சிலர் தாங்கள் நோயாளிகள் என்றும் தங்களால் கடினமான வேலைகள் செய்ய முடியாது வெளியிடங்களுக்கும் செல்ல முடியாது என்றும் மருத்துவ அறிக்கை கொடுத்துள்ளனர் இந்த விடயங்களை இங்குள்ள உயர் அதிகாரிகள் பார்த்து கொண்டிருப்பது பெரும் மனவேதனையாக உள்ளது இவ்வாறு அதிகார துஷ்பிரயோகம் செய்யும் தொழிலாளர்கள் அனைவரையும் உடனடியாக உயர் அதிகாரிகள் அமைச்சர்கள் இவர்களுக்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு இடமாற்றம் வழங்க வேண்டும் அதிகாரிகள் இதை கவனத்தில் கொள்ளவில்லை என்றால் இங்கு கடமை புரியும் ஊழியன் என்ற வகையில் நான் எனது காரியாலயத்ததின் நலன் கருதி எமது நாட்டில் உள்ள முக்கிய அமைப்புகளான பொதுபலசேனா ராவனபலய போன்றஅமைப்புகளை தொடர்பு கொண்டு நான் மிக விரைவில் இதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பேன் இன்ஷாஅல்லாஹ் 

இப்படிக்கு மாணி வாசிப்பாளர் F.A குத்தூஸ் பிராந்திய காரியாலயம் அக்கரைப்பற்று.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-