நாட்டின் ஏற்பட்டுள்ள அசாதார சூழ்நிலை காரணமாக பொருளாதாரம் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது.பெரும் பணக்கார்கள் கூட தமது அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு கஸ்டப்பட்டுக் கொண்டிருக்கும் சமயத்தில் எப்படி சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தமது தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியுமென கேள்வியெழுப்பினார் அக்கரைப்பற்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொறுப்பாளர் ஏ.எஸ்.பாஸீத்
அவர் தொடர்ந்து தமிழ் லெட்டர் செய்திச் சேவைக்கு கருத்து தெரிவிக்கையில் அம்பாரை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களில் வாழும் மக்கள் விவசாயம் மீன்பிடி மற்றும் கூலித் தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இப்படியான தொழில் துறைகளில் ஈடுபடும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்காகவே நான் செயற்பாட்டு அரசியலில் ஈடுபட்டு வருகின்றேன்.
அந்த அடிப்படையில் இந்த ஆண்டு (2019) அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் அவர்களின் நிதியொதுக்கீட்டின் கீழ் அக்கரைப்பற்று பிரதேசத்தில் பல அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.பாடசாலைகளின் பௌதீக வளப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும் முதற்கட்டமாக ஐந்து பாடசாலைகளுக்கு நிதியொதுக்கப்பட்டுள்ளது.அதே போன்று பள்ளிவாசல்களின் அபிவிருத்திக்காகவும் நிதியொதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான ஆரம்ப வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
அக்கரைப்பற்று பிரதேசத்தில் பல வீதிகள் இன்னும் அபிவிருத்தி செய்யப்படாமல் நீர் நிரம்பி காணப்படுகின்றது.அப்படியான வீதிகளை அடையாளம் கண்டு கம்ரெலிய திட்டத்தின் மூலம் பாரிய நிதியை எங்களது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி இஸ்மாயில் ஒதுக்கீடு செய்து தந்துள்ளார்.இதற்கான அனுமதியை மாவட்ட செயலகம் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திற்கு வழங்கியுள்ளது.
கட்டிய வீடுகளை பூரணப்படுத்த முடியாமல் வருடக் கணக்கில் அப்படியே தவித்துக் கொண்டிருக்கும் குடும்பங்களுக்கு வீடுகளுக்கான கூரைகளை அமைப்பதற்கான நிதியும் எமது கட்சியால் வழங்கப்பட்டு அதற்கான வேலைகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இளைஞர்கள் பாதை மாறிப் போகாமல் அவர்களை விளையாட்டின் மூலம் நற்பிரஜைகளாக மாற்றுவதற்கான வேலைத்திட்டத்தையும் ஆரம்பித்து கழகங்களின் கொள்ளலவை அதிகரிப்பதற்கு தேவையான வளங்களையும் பெற்றுக் கொடுத்துள்ளேன்.
நிர்க்கதியான குடும்பங்கள் மற்றும் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கான தொழில் உபகரணங்களும் 350 பேருக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் இன்னும் 500 பேருக்கு வழங்குவதற்கான பயனாளிகள் தெரிவும் இடம்பெற்று வருகின்றது.
இப்படியான வேலைத் திட்டங்களை எந்தவித அரசியல் நோக்கமும் இல்லாமல் சமூக சேவையாகவே கருதி செய்து வருகின்றேன் என மேலும் தெரிவித்தார் அமைப்பாளர் பாஸீத்