ஹரீஸ் எம்.பியை கொண்டாடுவோம்
பதவிக்காக எதையும் செய்யத்துணியும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் பதவியைவிட தனது சமூகமே முக்கியம் என கருதி தைரியமாக செயற்படும் ஒரு தலைவனாக ஹரீஸ் எம்.பியை பார்க்க முடியும்.
பதவி விலகியதற்கு ஒரு நோக்கம் இருந்ததென்றால் பதவியை மீள எடுப்பதற்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும் என்பது ஹரீஸ் எம்.பியின் பிடிவாதம்.
கல்முனையை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாத முஸ்லிம்களின் அடையாளம் அந்த அடையாளத்தை தொலைத்துவிட்டு நிற்பதற்கு ஹரீஸ் ஒன்றும் அரசியல்வாதியல்ல.அம் மண்ணின் காவலன்.
பிரதமர் தொடக்கம் சாதாரண தொண்டர்கள் வரைக்கும் அமைச்சை பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறிய போதும். என் மண்ணின் பாதுகாப்பை முதலில் உறுதிப்படுத்துங்கள் என்று முழக்கமிட்டவன் ஹரீஸ் எம்.பி
நீண்ட நாட்களாக அஷ்ரப்பை தேடிக் கொண்டிருக்கும் கடைக்கோடி தொன்டனுக்கு கிடைத்த வீர வேங்கை
பிரதமரின் உறுதிமொழியை கல்முனை முஸ்லிம் புத்திஜீவிகள் சந்தோசமாக ஏற்றுக் கொண்டு ஊர் திரும்பி கூட்டங்களை நாடாத்தி ஒன்று கூடி ஒரு தீர்மானத்திற்கு வந்து பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அமைச்சை மீளப் பெற வேண்டுமென்று கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதும்.
மண்ணின் பாதுகாப்பும் சமூகத்தின் பாதுகாப்பும் என்னை திருப்திப்படுத்தும் விதமாக இருந்தால்தான் நான் அமைச்சுப் பதவியை எடுப்பது தொடர்பாக சிந்திக்க முடியும் என்பது ஹரீஸ் எம்.பி முன் வைக்கும் நியாயமான பிடிவாதமாகும்.
இப்படியான தலைவனை பெற்றதற்கு கல்முனை மண் பெருமை கொள்கிறது