News Update :

Wednesday, July 10, 2019

TamilLetter

எனது பயணம் நேர்மையானது விமர்சனங்களால்; தடுக்க முடியாது – அன்வர் நௌஷாட்


ஏ.எல்.றமீஸ்
 
கல்குடா மண்ணின் பாதுகாப்பு கருதியே நான் அமிரலியின் வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்தேனே தவிர எனது சுயநலத்திற்காக அல்லவென கல்குடா தொகுதி முஸ்லிம் காங்கிரஸின் இணைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் இணைப்புச் செயலாளருமான எம்.ஜே.எம்.அன்வர் நௌஷாட் தெரிவித்தார்.
 
இன்று காலை இடம்பெற்ற செவ்வியிலே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்கள் இன்று பேரினவாத சக்திகளின் கோரப்பிடிக்குள் அகப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் முஸ்லிம்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம் மிகவும் அவசியமானது. அந்த அடிப்படையில்தான் கட்சிகளைத்தாண்டி பாராளுமன்ற பிரதிநிதியை பெறவேண்டுமென்பதில் நான் குறியாக இருந்தேன்.
 
இருந்த போதும் நமது மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி நமது சமூகத்திற்கான பாதுகாவலாராக இருக்கின்றாரா? என்பதில் பல கேள்விகள் உள்ளது.இக் கேள்விகளுக்கு பதிலைத் தேடும் முகமாகத்தான் நான் நமது தாய்க் கட்சியான முஸ்லிம் காங்கிரஸில் என்னை மீண்டும் இணைத்துக் கொண்டேன்.
 
சகோதரர் அமிரலியோடு எந்தவித எதிர்பார்ப்புமின்றி நமது பிரதேசத்திற்காக செயற்பட்டேனோ அதே போன்றுதான் இன்றும் எந்தவித எதிர்பார்ப்புமின்றி சமூத்திற்காக இணைந்துள்ளேன். என்னுடைய இணைவு அரசியல் வியாபாரிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. அதன் வெளிப்பாடுதான் எனக்கெதிரான விமர்சனங்கள். இந்த விமர்சனங்களால் நான் கடந்து செல்லும் பாதையை தடுத்து நிறுத்த முடியாது. ஏனென்றால் நான் நேர்மையாக எனது சமூகத்திற்காக பயணிக்கிறேன்.
 
ஒரு சில நண்பர்கள் எனது பழைய பதிவுகளை புதுப்பிக்கின்றனர். அவர்களுடைய இயலாமையை காலம் அழகாக இனம்காட்டித்தந்துள்ளது. இருந்தாலும் அவர்களையும் சமூக போராட்டித்திற்கு அழைத்து செல்வதே எனது முதல் பணியாகவும் உள்ளது என மேலும் தெரிவித்தார் இணைப்பாளர் எம்.ஜே.எம்.அன்வர் நௌஷாட்



TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-