News Update :

Monday, July 1, 2019

TamilLetter

அதாஉல்லாவின் ஆலோசனை ஜனாதிபதி தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கும் - வாசுதேவநாணயக்கார வெளியிட்ட தகவல்


எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எதிர்வரும் 9ம் திகதி கட்சி தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
“ஜனாதிபதி தேர்தலுக்கான காலம் நெருங்கிக்கொண்டிருக்கின்றபோதும் அது தொடர்பில் பொதுஜன பெரமுன எந்தவிதமான கலந்துரையாடல்களும் மேற்பொள்ளாமல் வேட்பாளர் தொடர்பில் அறிவிக்காமல் இருப்பது, தேர்தலை பிற்படுத்தும் திட்டத்திலா இருக்கின்றது என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது.
ஏனெனில் தேர்தல் எதுவும் இடம்பெறக்கூடாது என்ற நிலைப்பாட்டிலே ஐக்கிய தேசிய கட்சி இருக்கின்றது. இருந்தபோதும் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சி என்றவகையில் அண்மையில் மகிந்த ராஜபக்சவை சந்தித்து இதுதொடர்பாக எமது கருத்தை வெளிப்படையாக தெரிவித்தோம்.
அதாவது ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் சிறிய காலமே இருக்கின்றது. அதனால் சிறந்த வேட்பாளர் ஒருவரின் பெயரை விரைவில் அறிவிக்கவேண்டும். இல்லாவிட்டால் இறுதி நேரத்தில் வேறு பிரச்சினைகள் ஏற்படும் பட்சத்தில் எமக்கு செய்வதறியாத நிலை ஏற்படும் என தெரிவித்தோம்.
எமது நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்ட எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச, எதிர்வரும் 9ம் திகதி கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களை சந்தித்து இதுதொடர்பாக ஆராய தீர்மானித்திருக்கிறார்.
இந்த சந்திப்பில் பெரும்பாலும் கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக யாரை அநியமிப்பது என்று கொள்கையளவில் தீர்மானத்துக்கு வரும் சாத்தியம் இருக்கின்றது. அதனால் எதிர்வரும் 9ஆம் திகதி கட்சி தலைவர்கள் கூடி, ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தீர்மானத்துக்கு வரவேண்டும்.

சிறுபான்மை தலைவரான நாட்டை நேசிக்கும் அதாஉல்லாவோடு பேசிய போது சில ஆலோசனைகளை வழங்கினார்.அவரின் ஆலோசனை ஜனாதிபதித் தேர்தலில் இலகுவாக வெற்றி பெறக் கூடியதாக அமையும்.
 அதே போன்று  கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில,லங்கா சமசமாஜ கட்சி, பிரபா கணேசனின் கட்சி ஆகியன இணைந்து வேட்பாளர் ஒருவரை தீர்மானிக்க இணக்கப்பாட்டுக்கு வந்திருக்கின்றோம்” என கூறியுள்ளார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-