News Update :

Tuesday, July 2, 2019

TamilLetter

சில தினங்களாக நடத்தி வந்த தேடுதல் வேட்டையில் இதுவரை 1808 பேர் வரை கைது!


இலங்கை ரீதியில் சில தினங்களாக நடத்தி வந்த தேடுதல் வேட்டையில் இதுவரை 1808 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கலால் வரித்திணைக்களத்தினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
கடந்த ஜூன் மாதம் 23 ஆம் திகதி முதல் நேற்றுவரை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 60 லட்சம் ரூபாய் பெறுமதியான மதுபானம், கோடா, ஸ்பிரிட், வடிகட்டும் உபகரணங்கள் ஆகியன மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-