எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அமைச்சர் சஜித் பிரேமதாஸவை நியமிக்கலாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தால் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்க தயார் என ஜனாதிபதி குறிப்பிட்டதாக இந்தியா ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் இலங்கை விஜயம் தொடர்பான செய்திலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சர் சஜித் பிரேமதாஸ இந்திய பிரதமரின் இலங்கை விஜயம் முழுவதும் அவருடன் செயற்படுவார் என இலங்கை அதிகாரி ஒருவர் இந்திய ஊடகத்திடம் குறிப்பிட்டுள்ளார்.
மோதியின் இலங்கை விஜயத்தின் நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக சஜித் பிரேமதாஸ நியமிக்கப்பட்டுள்ளார்.
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதியாகும் வவாய்ப்பு அவரிடம் உள்ளது. அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
சஜித் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டால் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் என குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.