News Update :

Thursday, June 20, 2019

TamilLetter

கால்பந்து வீரர் சாலா மரணம்: அதுவொரு சதி! விமானி கைது!


அண்மையில் நடந்த விமான விபத்தில் அர்ஜெண்டினாவைச் சேர்ந்த கால்பந்து வீரரான எமிலியானோ சாலா கொல்லப்பட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்ட விமானியை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
பிரான்சின்  நண்டாஸ் கால்பந்து கிளப்பிற்கு விளையாடி வந்த சாலா கடந்த ஜனவரி 21-ம் தேதி அன்று பிரான்ஸிலிருந்து வேல்சிலுள்ள கார்டிப் நகருக்கு விமானத்தில்  வந்து கொண்டிருந்த போது  விமானம் விபத்துக்குள்ளாகி கடலில் விழுந்தது.
கிட்டத்தட்ட பதினைந்து நாட்களுக்குப் பின்னர் அவரது உடல் மீட்கப்பட்டது.  சாலா பயணம் செய்த விமானத்தை ஓட்டிய விமானி டேவிட் இபோட்சன்சன் என்பவரின் உடல் இதுவரையில் கிடைக்கவில்லை.
இதனிடையே அந்த விமானத்தை  கடைசி நேரத்தில் டேவிட் இபோட்சனிடம் ஒப்படைத்த அவரை ஓட்டச் செய்த  மூத்த விமானியான 64 வயதுடைய ஹெண்டர்சனை போலீசார் நேற்று கைது செய்தனர்.
சாலாவின் விமான விபத்து ஒரு சதியாக இருக்கும் என்ற அடிப்படையில் அவரிடம் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விமானம் புறப்படுவதற்கு சற்று நேரத்திற்கு முன்பு ஹெண்டர்சன் அந்த விமானத்தை தன்னுடைய  நண்பரான டேவிட் இபோட்சனிடம்  ஒப்படைத்து அந்த விமானத்தை ஓட்டிச் செல்லும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார்.
அனுபவமில்லாத இபோட்சன்  அந்த விமானத்தை ஓட்டி இருக்கிறார்.  பிரான்சின் நண்டாஸ் கால்பந்து குழுவிலிருந்து வேல்சின் கார்டிப் குழுவுக்கு   விளையாடுவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு அக் குழுவுடன் இணைந்து கொள்வதற்காக சாலா விமானத்தில் வந்த போதுதான் இந்த விபத்து நடந்துள்ளது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-