News Update :

Sunday, June 9, 2019

TamilLetter

ஹிஸ்புல்லாவை கிழித்து தொங்கவிட்ட ரவுப் ஹக்கீம் - வீடியோ இணைப்பு உள்ளே



முகம்மட் ஆசீப் ஏறாவுர்

எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் காத்தான்குடியை மையப்படுத்தி  அரசியலில் ஈடுபடுபவர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் தமது அரசியலை ஆரம்பித்த இவர்,மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு  வட கிழக்கு மாகாண சபை உறுப்பினராவார்.
அதனைத் தொடர்ந்து 89ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.

 சந்திரிக்காவின் மீள் வருகையினால் அவர்களின் காலத்தில் பிரதி தபால் மற்றும் தொலைத்தொடர்புப் பிரதி அமைச்சராக பதவி வகித்தார்.

தலைவர் அஷ்ரப் அவர்களின் மறைவுக்கு பிற்பாடு ரவுப் ஹக்கிமுடன் கொண்ட,  முரண்பாட்டின் பொருட்டு தேசிய ஐக்கிய முன்னணியுடன் இணைந்து அதன் உப தலைவராச் செயற்பட்டார்.
அக்கட்சியிலிருந்து செந்திரிகா தலைமையிலான கூட்டமைப்பின் ஊடாக பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடந்த ஹிஸ்புல்லா அமைச்சர்  மங்கள சமரவீரவினால் நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபையின்   தலைவராக நியமிக்கப்பட்டார்.
ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்தை கலைத்து 2004ம் ஆண்டு  புதிய தேர்தலை நடாத்திய ஜனாதிபதி சந்திரிகாவின்   ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் மீண்டும்  மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ஹிஸ்புல்லா தோல்வியைத் தழுவினார்.
இத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு பெரும் வெற்றி பெற்று அரசாங்கத்தை நிறுவி அதில்  விமான நிலையங்கள் மற்றும் வான் வழிப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவராக நியமிக்கப்பட்டார் ஹிஸ்புல்லா.
தேசிய கட்சியில் அரசியல் செய்து வந்த ஹிஸ்புல்லா  மீண்டும் ரவுப் ஹக்கிம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரசில் சேர்ந்து கட்சிப் பணியில் ஈடுபட்டார்.

 கிழக்கு மாகாணம் தனியாக பிரிக்கப்பட்டு 2008ம் ஆண்டு மாகாண சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு அதில் போட்டியிடுவதற்கான ஆயத்தங்களில் கட்சிகள் ஈடுபட்டு வந்த நிலையில் யாருக்கும் சொல்லாமல் முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்து ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டமைப்போடு இணைந்து கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
மாகாண சபை உறுப்பினராக இருந்து கொண்டே 2010ம் ஆண்டு நடைபெற்ற  பாராளுமன்ற தேர்தலில் மஹிந்த ராஜபக்ச அவர்களின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஹிஸ்புல்லா பிரதியமைச்சர் பதவியை வகித்தார்.
 2015ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில்  அதி தீவிர மஹிந்தவாதியாகத் தன்னைக் அடையாளப்படுத்திக் கொண்டு மஹிந்தவின் வெற்றிக்காக பிரச்சாரம் கிழக்கு மாகாணம் முழுவதும் பிரச்சாரம் செய்தும் தமிழ்,முஸ்லிம் மக்கள் மஹிந்தவிற்கு எதிராகவே வாக்களித்து தோல்வியடைச் செய்தனர்.

ஜனாதிபதி மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிபீடமேறி அதே ஆண்டு பொதுத் தேர்தலுக்கு சென்றது.

இத் தேர்தலில் மஹிந்த ஆதரவாளராக மீண்டும் தன்னை நிலைநிறுத்தி இத்தேர்தலில் போட்டியிட்டு சுமார் 140 வாக்குகளால் தோல்வியடைந்த போதும்
 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால்  தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றம் சென்று ராஜாங்க அமைச்சுப் பதவியையும் வகித்தார்.
கடந்த வருடம் இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில், காத்தான்குடியில் இவரது வழி நடத்தலின் கீழ் கை சின்னத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அனைத்து வட்டாரங்களையும் வென்றதுடன், ஜனாதிபதி மைத்திரியின் சுதந்திரக் கட்சியின் வாக்கு வங்கியையும் பலப்படுத்தினார்.
பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான முரண்பாட்டினால் தேசிய அரசாங்கம் கலைக்கப்பட்ட போது தனது இராஜாங்க அமைச்சு பறிபோன நிலையில் ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு அமைய தனது தேசிப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜீனமா செய்த ஹிஸ்புல்லா கிழக்கு மாகாண ஆளுணராக நியமிக்கப்பட்டார்.












TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-