ஏ.எல்.றமீஸ்
சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் நெருக்குவாரங்களை எதிர் கொள்வதற்கு சகல முஸ்லிம் தலைவர்களும் ஒரே அணியில் நின்று செயற்பட வேண்டுமென முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கிம் கருத்து தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய பிரமுகர்களோடு முஸ்லிம் சமூகம் தற்போது எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்ரையாடிய போதே இதனை அவர் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் முஸ்லிம் தலைவர்கள் எதிர்காலத்தில் எப்படியான தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்பது தொடர்பாக அரசியல் பேதங்களுக்கப்பால் தேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லாவின் கருத்துக்கள் உள்வாங்கப்பட வேண்டிய அவசியம் தொடர்பாக சுட்டிக்காட்டினார் ரவூப் ஹக்கிம்.
இதன் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவோடு ஒரு கலந்துரையாடலில் ஈடுபடுவதற்கும் தீர்மானித்துள்ளார் என பெயர் குறிப்பிட விரும்பாத கட்சியின் முக்கியஸ்தர் தமிழ் லெட்டரிடம் தெரிவித்தார்.