பாராளுமன்ற உறுப்பினர்கள் சபைக்கு வந்து அமர்வதற்காக வழங்கப்படுகின்ற கொடுப்பனவை நிபந்தனைக்குட்படுத்தவேண்டும் என எதிர்கட்சி உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
பாராளுமன்றம் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகள் இடம்பெற்ற பின்னர் ஒழுங்கு பிரச்சினை ஒன்றை முன்வைத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக ஒருநாளைக்கு 2, 500 ரூபா வழங்கப்படுகின்றது. இந்த கொடுப்பனவு வழங்கப்படுவதை நிபந்தனையுடன் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பிரேரணை ஒன்றை முன்வைக்கின்றேன்.
அத்துடன் இந்த கொடுப்பனவை பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொள்ளவேண்டுமாக இருந்தால் சுமார் 5 மணி நேரமாவது சபையில் இருக்கவேண்டும் என்ற தீர்மானம் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் அவர் சுட்டிகாட்டினார்.