News Update :

Tuesday, June 4, 2019

TamilLetter

அட்டாளைச்சேனை பிரதித் தவிசாளரின் பெருநாள் வாழ்த்து செய்தி

சட்டத்தரணி எஸ்.எம் ஹனிபா

முஸ்லிம்களுக்கு அருளப்பட்ட புனித ஐம்பெருங் கடமைகளில் நிகரற்ற கடமை, புனித ரமழான் நோன்பு என்று திருக்குர் ஆன் அழுத்தந் திருத்தமாகச் சொல்லுகின்றது என்று அட்டாளைச்சுனை பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் சட்டத்தரணி எஸ்.எம்.ஹனிபா  தனது நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

புனித ரமழான் மாதத்தின் முப்பது நாட்களிலும் பொழுது புலரும் வேளையில் இருந்து  சூரியன் மறையும் நேரம் வரை பசி பொறுத்து  தாகத்தைத் தாங்கி புலன்களின் இச்சைகளைக் கட்டுப்படுத்தி நோன்பு நோன்று  நிறைவு செய்கின்ற வகையில் ரமழான் பெருநாள் அமைகின்றது.

காய்ந்த குடல்கள், காலியான வயிறுகள், பசியின் அகோரத்தைப் புரிய வைக்கின்ற ரமழான் மாதம் தருகின்ற படிப்பினை, வறியோர்க்கு உதவிக் கரம் நீட்டுங்கள் என்பதாகும்.

  இன்று நாட்டில் முஸ்லிம்கள் புனித நோன்பை நோற்க விடாமல் இஸ்லாமிய விரோத சக்திகளால் தடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அத்தோடு வலிந்து வந்து முஸ்லிம்கள்மீது வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்

இப்படியான நிலையில் முஸ்லிம் சமூகம் சமாதானத்தோடும் ஐக்கியத்தோடும் வாழ்வதற்கு இறைவன் அருள; புரிய வேண்டுமென அல்லாஹவை பிராா்த்திக்கின்றேன்.

சட்டத்தரணி எஸ்.எம்.ஹனிபா
பிரதித் தவிசாளர்
பிரதேச சபை
அட்டாளைச்சேனை


TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-