News Update :

Friday, June 21, 2019

TamilLetter

பாராளுமன்ற பதவியை இராஜினமா செய்யும் கோடீஸ்வரன்


கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஒருவாரத்திற்குள் தீர்வு தரப்படாவிட்டால் தான் வகிக்கும் கட்சியில் இருப்பது தொடர்பாக மறுபரிசீலனை செய்யப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கல்முனை பிரதேச செயலகத்துக்கு முன்னால் நடைபெற்றுவரும் உண்ணாவிரத போராட்ட களத்திற்கு அமைச்சர் மனோ கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருடன் சென்றிருந்த கோடீஸ்வரன் அங்கு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே மேற்கண்ட எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
கல்முனையில் 5ஆவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்துள்ள சர்வமதத் தலைவர்களை சந்தித்த போதே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-