பிரித்தானிய பிரதமர் தெரேசா மே கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பதவியிலிருந்து இன்று இராஜினாமா செய்யவுள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வௌியேறும் "பிரெக்ஸிட்" உடன்படிக்கையை உரியமுறையில் நடைமுறைப்படுத்த முடியாமல் போனதையடுத்தே, பிரித்தானிய பிரதமர் கட்சித் தலைமை பதவியை இராஜினாமா செய்யவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிரித்தானியாவின் புதிய பிரதமர் தொடர்பில் கன்சர்வேட்டிவ் கட்சி எதிர்வரும் ஜூலை மாதம் உத்தியோகப்பூர்வ அறிவிப்பை வெளியிடவுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆகவே இன்று முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை வேட்பாளர் நியமனங்கள் ஏற்றுக் கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்யும் வரை தாம் பதவியில் தொடரப்போவதாக பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.