News Update :

Thursday, June 6, 2019

TamilLetter

ஹரீஸ் எம்.பியின் இராஜதந்திரத்தால் அதிர்ந்தது பேரினவாதம்குல்ஸான் எபி

52 நாட்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி அந்த அதிகாரத்தை தக்க வைக்க முடியாமல் போன பேரினவாதிகளின் அடுத்த கட்ட சதிப்புரட்சியே ரிஷாட் பதியூதீன்,ஹிஸ்புல்லா,அசாத்சாலி ஆகியோரின் பதவி விலகல் போராட்டம்.

ஒரு சிறுபான்மை இனத்தின் அடிப்படை உரிமைகளை இலக்கு வைத்து நாட்டின் பெரும்பான்மை சமூகத்தினரை ஏவிவிட்டு நாட்டை தன் கைப்பிடிக்குள் வைத்திருப்பதற்கான சூழ்ச்சியில் பேரினவாதம் தோற்றுப்பேய்யுள்ளது.

முஸ்லிம்களுக்கு எதிராக திசை திருப்பப்பட்ட இன மோதல்களை தடுத்து நிறுத்துவதுடன் சர்வதேச பார்வையையும் இலங்கை மீது திருப்பி விட்ட பெரும் கைங்காரியத்தை தனது இராஜ தந்திரத்தின் மூலம் அமைதியான முறையில் செய்து காட்டிய சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் சாதனையை பாராட்டாமல் இருக்க முடியாது.

முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த மூன்று நபரை பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பதவி விலகுமாறு கோரி உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் செயற்பாட்டிற்கு வலுச்சேர்க்கும் சந்தர்ப்பங்கள் நாள்தோறும் அதிகரித்து வந்த நிலையிலே பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸின் குரல் பலமாக ஓங்க ஆரம்பித்தது.

முஸ்லிம் அரசியலிலும் சரி ஹரீஸ் எம்.பியின் தனிப்பட்ட அரசியலிலும் பலமான எதிரிப்பை காட்டி வந்த ரிஷாட் பதியூதினுக்கு ஆதரவாக குரல் கொடுத்தது எல்லோரையும் ஒருகனம் திரும்பி பார்க்க வைத்தது.

 பூனைக்கு மணி கட்டும் முதலாவது நபராக முன்வந்த ஹரீஸ் எம்.பி தனது இராஜாங்க அமைச்சர் பதவியை துறக்கப் போவதாக சூழுரைத்தார்.

அதுமட்டுமல்ல அரசியலைத்தாண்டி இம் மூவரும் முஸ்லிம் சமூகத்தை சார்ந்தவர்கள் என்பதால் எக்காரணம் கொண்டும் இவர்களை பழிகொடுக்க முடியாது என அழுத்தமாக தனது நிலைப்பாட்டையும் தெரிவிததிருந்தார்.

இதே போன்று அண்மையில் ஜனநாயத்திற்கு எதிரான முறையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட வேளையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களையும், முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களையும் சவூதி அரேபியாவில் வைத்து ஒற்றுமைப்படுத்தி ஜனநாயகத்தை பாதுகாத்த நபராகவும் ஹரீஸ் எல்லோராளும் பார்க்கப்பட்டிருந்தார்.

முஸ்லிம் சமூகத்திற்கு இன்று ஏற்பட்டிருக்கும் மிகவும் மோசமான சூழ்நிலையிலிந்து அவசரமாக விடுபட வேண்டிய இக்கட்டான நிலையில் விருப்பு வெறுப்புக்களுக்கப்பால் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே ஹரீஸ் எம்.பியின் விடாப்பிடியான போராட்டமாக இருந்தது.

இதற்காக முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தனியாகவும்,கூட்டாகவும் ஒற்றுமைப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.

ஹரீஸ் எம்.பியின் இந்த முயற்சிக்கு சற்றுமே எதிர்பார்க்காத ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர் கபீர் காசீம் தனது பதவியை துறக்க முன்வந்தார்.

அதே போன்று தனது கட்சியின் தலைமை ரவூப் ஹக்கீம் முஸ்லிம் சமூகம் பாதிக்கப்படக் கூடாது என்பதில் மிகவும் அவதானமாக செயற்பட்டு தனது அமைச்சுப் பதவிகளை இராஜினமா செய்தார்.

அத்தோடு அமைச்சர் ஹலீம்,இராஜாங்க அமைச்சர்களான பைஸல் காசீம்,அலிசாஹீர் மௌலானா,அமீர் அலி,பிரதியமைச்சர் மஹ்ரூப் ஆகியோரும் பதவி விலகுவதற்கு பூரண சம்மதத்தை தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அணைவரும் இணைந்து தமது பதவி விலகல் கடிதத்தை பிரதமரிடம் கையளித்து விட்டு ஊடகங்கள் மூலம் முஸ்லிம் சமூகத்தின் நிலைப்பாட்டை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தினார்.

முஸ்லிம் சமூகத்தை இக்கட்டான நிலைக்கு தள்ளிவிட திட்டம் தீட்டிய பேரினவாதிகளுக்கு முஸ்லிம் அமைச்சர்களின் பதவி விலகல் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. அரசியலில் பிரிந்து நின்று செயற்பாட்டாலும் சமூகம் என்று வரும் போது முஸ்லிம்கள் ஒற்றுமைப்பட்டுவிட்டார்கள் என்று எதிரியே கூறும் அளவிற்கு இந்த இணைப்பு பெரும் தாக்கத்தை செலுத்தியுள்ளது.

பதவி விலக வேண்டுமென்று கூறி தனது போராட்டத்தை நடாத்திய மதகுருவின் வீரியம் இதனால் குறைக்கப்பட்டு முஸ்லிம் எம்.பிக்கள் அமைச்சுப் பதவியை மீண்டும் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பௌத்த பீடங்களால் இன்று அறிவிக்கப்பட்டு வருகின்றது.

ஓற்றுமையின் வெற்றியால் இன்று முஸ்லிம் சமூகம் தலைநிமிர்ந்து நின்கின்றது.சமூகம் தலைநிமிர பாடுபட்ட சட்டத்தரணி ஹரீஸ் எம்.பிக்கு முஸ்லிம் சமூகம் மானசீகமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.
TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-