அண்மையில் பதவிலியிருந்து விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் அந்த பதவினை பெற்றுக்கொள்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
நேற்று இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போது புதிதாக யாரையும் அமைச்சர்களாக நியமிக்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையிலேயே, அண்மையில் பதவிலியிருந்து விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் அந்த பதவியினை பெற்றுக்கொள்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ஒரு மாதத்திற்குள் குற்றச்சாட்டு விசாரணைகள் நிறைவடைந்த பிற்பாடு விலகிய அமைச்சர்கள் மீண்டும் அமைச்சுப் பதவி ஏற்பதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஒரு மாதத்திற்குள் குற்றச்சாட்டு விசாரணைகள் நிறைவடைந்த பிற்பாடு விலகிய அமைச்சர்கள் மீண்டும் அமைச்சுப் பதவி ஏற்பதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.