2030 ஆம் ஆண்டளவில் வறுமையற்ற இலங்கை எனும் தொனிப் பொருளின் கீழ் ஆறு இலட்சம் புதிய சமூர்த்தி பயனாளிகளை உள்ளீர்க்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
ஒவ்வொறு பிரதேச செயலகங்களும் தமது பிரதேசத்தில் இனம்கானப்பட்ட வருமானம் குறைந்த குடும்பங்களை தெரிவு செய்து குறிப்பிட்ட அமைச்சுக்கு பயனாளிகளின் பட்டியலை அனுப்பி வைக்கப்பட்டு அமைச்சின் அனுமதி கிடைக்கப்பெற்று அவர்களுக்கான கூப்பன் அட்டைகள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்திற்கு அமைய வறுமை நிலையில் இருக்கும் குடும்பங்களை சமூர்த்தி பயனாளிகளாக தெரிவு செய்யும் செயற்பாடு உரிய முறையில் மேற்கொள்ளவில்லையென்ற குற்றச்சாட்டையும் பலர் முன்வைக்கின்;றனர்.
அம்பாரை மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட சுமார் 25 ஆயிரம் சமூர்த்தி கூப்பன்கள் இனப்பாகுபாடு முறையில் வழங்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
இதில் விகிதாசார அடிப்படையில் அக்கரைப்பற்று மற்றும் இன்னும் சில பிரதேசங்களைச்; சேர்ந்த குடும்பங்கள் புறக்கனிக்கப்பட்டுள்ளதாகவும் சில உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் எமது தமிழ் லெட்டர் செய்திச் சேவைக்கு தெரிவித்தனர்.
அந்த அடிப்படையில் அம்பாரை மாவட்டத்தில் பிரதேச ரீதியாக வழங்கப்பட்ட சமூர்த்தி கூப்பன்கள் கீழே தரப்பட்டுள்ளது.
நல்லாட்சி அரசாங்கம் அமைவதற்கு நூறுவீதமான ஆதரவை வழங்கி வந்த நிலையில் இந்த அரசாங்கம்; திட்டமிட்டு இம் மக்களை புறக்கணித்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.