News Update :

Monday, June 24, 2019

TamilLetter

கல்முனை பிரச்சினை தொடர்பாக முன்னாள் அமைச்சர் நவரட்ணராஜாவின் யோசனை



அம்பாரை மாவட்டத்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் நீண்ட வரலாற்றைக் கொண்ட சமூகங்களாக வாழ்ந்து வருகின்றனர்.இச் சமூகங்களின் ஒற்றுமை மற்றும் புரிந்துணர்வு காரணமாகவே இரண்டு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தங்கி வாழுகின்ற சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.

அப்படி ஒற்றுமையாக வாழ்ந்த சமூகங்களுக்கிடையில் அவ்வப்போது சில பிரச்சினைகள் தோன்றினாலும் அது உடனே மறக்கடிக்கப்பட்டு வழமையான நிலைக்கு திரும்புகின்ற பல சந்தர்ப்பங்களை நாம் பார்த்திருப்போம்.
ஆனால் இன்று கல்முனையில் ஏற்பட்டிருக்கின்ற பிரச்சினையானது அரசியல்வாதிகளால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதனால் இப் பிரச்சினைக்கான தீர்வுகாணப்படாமல் இரு சமூகங்களும் முட்டி மோதிக் கொள்கின்றன.

எல்லை நிர்ணயம் செய்யப்படாமல் சில பிரதேச செயலகங்கள் இயங்கிக் கொண்டு இருக்கின்ற நிலையில் எல்லை நிர்ணயம் செய்யப்படாமல் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்துவதில் எந்த தவறுமில்லை.

தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்தப்படும் சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களின் வியாபாரா மையங்கள் தமிழ் பிரதேச செயலகத்திற்குள் சென்று விடும் எனும் அச்சம் முஸ்லிம்கள் மத்தியில் ஏற்படுவது நியாயமானதொன்றே.

இப்படியான நிலையில் இரண்டு சமூகங்களும் பாதிக்காத நிலையில் நியாயமான தீர்வை பெறவேண்டுமாயின்; பேச்சு வார்த்தைகளின் மூலமும் விட்டுக் கொடுப்புகள் மூலமுமே நாம் அவற்றை அடைய வேண்டும்.

பிரதேச செயலகம் தமிழ் மக்களுக்கு எவ்வளவு முக்கியமோ அதே போன்று முஸ்லிம்களின் வியாபார மையப்பகுதியும் அவர்களுக்கு முக்கியமானதாகும்

.எனவே முஸ்லிம்களுடைய வியாபார மையப்பகுதியை மாத்திரம் தவிர்த்துவிட்டு தமிழ் பிரதேச செயலகத்தின் எல்லையை மீள்நிர்ணயம் செய்யமுடியும் இதற்காக பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களுடன் கலந்துரையாடுவதற்கு தயாராகவுள்ளேன் என தமிழ் லெட்டர் செய்திச் சேவைக்கு டாக்டர் ரீ நவரட்ணராஜா தெரிவித்தார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-