News Update :

Tuesday, June 4, 2019

TamilLetter

இஸ்லாம் உயர்வு தாழ்வை கற்பிக்காத மகத்தான தத்துவம் - அன்வர் நௌஷாட்



நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின்படி உலகில் அன்பு பெருகவும், அமைதி நிலைபெறவும் முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் நோன்பிருந்து கடமையாற்றுவது போற்றுதலுக்குரியதோடு
இஸ்லாம் என்னும் வாழ்க்கைநெறி பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வைக் கற்பிக்காத ஒரு மகத்தான தத்துவமாகும் என முஸ்லிம் காங்கிரஸின் கல்குடா தொகுதி இணைப்பாளர்  எம்.ஜே.எம். அன்வர் நெளஷாட் தனது நேதன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டடிருந்தார்.

அவர் தொடரந்து கருத்து தெரிவிக்கையில்

பலஸ்தீன்,சிரியா,ஈராக்,ஆப்கானிஸ்தான் போன்ற இன்னும் பல நாடுகளில் வாழுகின்ற முஸ்லிம்கள் பல ஆண்டுகாலமாக இஸ்லாத்தின் விரோதிகளால்  நிலங்கள்,சொத்துக்கள்,உயிர்கள் என எல்லாவற்றையும் இழந்து நிர்க்கதியான நிலையிலும்  இஸ்லாத்தின் கொள்கையிலிருந்து ஒரு துளிகூட மாறவில்லை.

அதே போன்று நமது நாட்டின் ஒற்றுமைக்கும் தேசத்தின் அபிவிருத்திக்கும் ஆயிரம் ஆண்டுகளைத்தாண்டி ஒத்துழைத்துவரும் முஸ்லிம்கள் மீது இஸ்லாத்தின் விரோதிகளால் திட்டம் தீட்டப்பட்டு இனஅழப்பு நடவடிக்கையில் சிங்கள பேரினவாதம் ஈடுபட்டுள்ளதை என்னி முஸ்லிம்கள் மனம் வருந்துகின்றனர்.

தினமும் நமக்கு ஏற்படும்  இப்படியான தாக்குதல்களினால் முஸ்லிம்களாகிய நாம் மிகவும் பொறுமையுடனும் புத்தியுடனும் நடந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.

இந்நாட்டில் வாழும் முஸ்லிம்களின் பாதுகாப்பு இறைவனைத் தவிர வேறு  யார் கையிலும் இல்லை என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

 உலக முஸ்லிம்கள் நிம்மதியாகவும் சுவிட்சமாகவும் வாழ இப் புனித தினத்தில் நான் இறைவனிடம் பிராா்த்தனை செய்கின்றேன்.

எம்.ஜே.எம்.அன்வர் நௌஷாட்
இணைப்பாளர் கல்குடா தொகுதி
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-