'முஸ்லிம்களின் இணையற்ற பெருநாளாக விளங்குவது நோன்பு பெருநாளாகும். அடுத்தவரின் பசியறிந்து பகிர்ந்துண்ணும் பன்பை தேசம் முழுவதும் எடுத்துச் சொல்வது புனித நோன்பின் தனிச்சிறப்பு.
இதன்மூலம் மதங்களை கடந்த மனிதத்தை நேசிக்கும் உயரிய மாண்பை எடுத்துச் சொல்லும் நாள் இதுவாகும் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் அக்கரைப்பற்று ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான ஏ.எல்.தவம் தனது பெருநாள் வாழ்த்துச செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
முப்பது நாட்கள் நோன்பிருந்து உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக்குவதன் மூலம் நாம் வாழும் சூழலும் தூய்மையாகும் என்பது நிதர்சனமான உண்மை.
சிங்கள,தமிழ்,முஸ்லிம் என்ற பேதங்களால் பிரிந்து நின்று முட்டி மோதிக் கொண்டிருக்கும் சமூகங்களை ஒற்றுமைப்படுத்துவதற்கான சந்தர்ப்பமாகவும் இந்த நோன்புப் பெருநாளை மாற்றியமைக்க வேண்டிய கடப்பாடு நம் எல்லோருக்கும் உண்டு.
இதன் மூலம் தேசிய ஒருமைப்பாடும் மத நல்லிணக்கமும் இன்றைய சூழலில் மிக மிக அவசியமானது.
அன்மையில் நாட்டில் ஏற்பட்ட அசாதரண சூழ்நிலையில் தமது மார்க்க கடமையை நிறைவேற்ற முடியாமல் போன நமது உடன் பிறப்புக்கள் அனைவருக்கும் இறைவனிடம் பிரார்த்தனை செய்வதோடு இந்த ஈகைத் திருநாளில் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து முஸ்லிம் உறவுகளுக்கும் இதயம் நிறைந்த நோன்பு பெருநாள் நல் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்'' என்று முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் அக்கரைப்பற்று ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான ஏ.எல்.தவம் தெரிவித்தார்.