News Update :

Wednesday, June 12, 2019

TamilLetter

தேசியம் வரை சாதித்தது அக்கரைப்பற்று முனவ்வரா கனிஷ்டகல்லூரி.



Siyan Sariftheen

தேசியம் வரை சாதித்தது அக்கரைப்பற்று முனவ்வரா கனிஷ்டகல்லூரி.
கடந்த 2018 December ல் நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப்பரீட்சையில் அக்கரைப்பற்று கல்வி வலயம் மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தையும் தேசிய ரீதியில் 8வது இடத்தையும் பெற்று பெருமையீட்டியுள்ளது.

மேற்படி பரீட்சையின் பெறுபேறுகளின் படி அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் முனவ்வரா கனிஷ்ட கல்லூரி முதலாம் இடத்தைப் பெற்று பெருமை சேர்த்துள்ளது. இப்பாடசாலைக்கு ZD award னை கல்லூரியின் முதல்வர் அல்ஹாஜ் A.G அன்வர் அவர்களுக்கு வலயக்கல்விப் பணிப்பாளார் ரஹ்மதுல்லாஹ் அவர்களினால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

2011 - 2019 ம் ஆண்டு வரை தனது அயராத சேவையை வழங்கி பாடசாலையின் கல்வி வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்ற கல்லூரியின் முதல்வரும் தேசிய உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் அங்கத்தவருமான அல்ஹாஜ் A.G. அன்வர் (sir) அவர்கள் 2019.06.19 ம் திகதி தனது பணியிலிருந்து ஓய்வு பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு பாடசாலை சமூகம், ஆசிரியர் குழாம், நிர்வாக உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்கள் தங்களது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறார்கள்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-