News Update :

Tuesday, June 4, 2019

TamilLetter

சுயகௌரவத்துடன் சுதந்திரமாக வாழ வேண்டும் - மாநகர சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.சஹாப்தீன்

புனித நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்!


புனித நோன்பு பெருநாளை  இன்று  கொண்டாடுகின்ற உலக  முஸ்லிம்கள் அனைவருக்கும் எனது பெருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன் என்று அக்கரைப்பற்று மாநகர சபையின் உறுப்பினர் எம்.ஐ.எம்.சஹாப்தீன் தனது பெருநாள் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
சந்திரனின் சுழற்சியை வைத்து கணக்கிடப்படும் இஸ்லாமிய மாதங்களில் ஒன்பதாவது மாதம் புனித ரமழான் மாதமாகும். இந்த நோன்பு பெருநாளை முன்னிட்டு உலகம் முழுவதும்  விசேட பெருநாள் தொழுகை மற்றும் பிரார்த்தனைகள் இடம்பெற்று வருவதையிட்டு நான் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.  
இஸ்லாத்தின் ஐம்பெருங் கடமைகளில் ஒன்றான நோன்பை ரமழான் மாதம் முழுவதும் நோற்ற பின்னர் ஈதுல் பித்ர் பெருநாள் கொண்டாடப்படுகின்றது.

அகிலத்திற்கும் ஓர் அருட்கொடையான புனித அல்குர்ஆன் ரமழான் மாதத்திலேயே பூமிக்கு அருளப்பெற்றது. இந்த மாதத்தில் விழித்திருந்து, பசித்திருந்து, தனித்திருந்து ஒரு மாதகாலமாக நோன்பு நோற்பதுடன், நோன்பானது ஒவ்வொரு முஸ்லிமுனுடைய புலனடக்கத்தையும், மனக் கட்டுப்பாட்டையும் உருவாக்கும் சிறந்த ஆன்மீக பயிற்சியாகவும் அமைந்துள்ளது.
வெறுமனே பசித்திருப்பதும், தாகித்திருப்பதும் மாத்திரமின்றி, இந்த பயிற்சியின் மூலம் இறையச்சத்தை தன்னகத்தே வளர்த்துக் கொள்வதே நோன்பின் அடிப்படை நோக்கமாகும் என்று அல் குர்ஆன் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த புனித தினத்தில் முஸ்லிம்கள் தேச முழுவதும் பல கொடுமைகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் ஆளாகி வருவதையிட்டு நான் மிகுந்த வேதனையடைகிறேன்.
அப்படி பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொறு முஸ்லிமும் தனது சுயகௌரவத்துடன் சுதந்திரமாக வாழ இப்புனித தினத்தில் நான் இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றேன்.
எம்.ஐ.எம்.சஹாப்தீன்
மாநகர சபை உறுப்பினர்
அக்கரைப்பற்று

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-