அமைச்சர் ரிசாட் பதியுதீன், ஆளுனர்கள் ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலி ஆகியோரை பதவிநீக்க கோரி ஆங்காங்கே போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்தநிலையில், முஸ்லிம் எம்.பிக்கள் அனைவரும் தற்போது கொழும்பில், பௌசி வீட்டில் கலந்துரையாடலில் ஈடுபட்டு
வருகிறார்கள்.
அமைச்சர்கள் ரிசார்ட் பதியுதீன் மற்றும் ஆளுநர்மார் ஹிஸ்புல்லாஹ் ,அசாத்சாலி ஆகியோர் பதவி விலக வலியுறுத்தி கண்டியில் ரத்தன தேரர் ஆரம்பித்துள்ள உண்ணாவிரதம் இன்று நான்காவது நாளை எட்டியுள்ள நிலையில் ,பதவி விலகல் குறித்து இன்றைய கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது.
பதவிகளில் இருந்து விலகுவதாயின் அனைத்து முஸ்லிம் அரசியல்வாதிகளும் தமது பதவிகளை விட்டு விலகுவதென்று உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் இன்றைய கூட்டத்தில் அது தொடர்பில் ஆராயப்படுமென்றும் முஸ்லிம் அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.
மூன்று முஸ்லிம் அரசியல்வாதிகளை பதவி விலக்க இனவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்ப்டுவதை எதிர்த்து இப்படி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரசியலில் அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டிய தீர்மானங்கள் குறித்து இதில் ஆராயப்பட்டு வருகின்றன.