News Update :

Wednesday, June 12, 2019

TamilLetter

சிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூரின் ஆதங்கம்



(முஹம்மது முர்சீத்)

அண்மையில் முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் அக்கட்சியின் தேசிய தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் 'தாருஸ்ஸலாம்' தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற போது நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை சம்பந்தமாக பல உறுப்பினர்களின் கருத்துக்கள் காரசாரமாக பரிமாரப்பட்டன. குறிப்பாக குறித்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் குற்றங்குறைகளை மட்டும் கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் முன் வைத்து அவர்களின் தனிப்பட்ட கருத்துக்களைத் தெரிவித்தார்கள் இதனை அமைதியாக செவிமடுத்துக் கொண்டிருந்த தலைவர் ஹகீம் அவர்கள் மற்றவர்களின் குறைகளை பகிரங்கமாக தெரிவிப்பது பொருத்தமற்றது எனவும் அதனை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்தார்.

இக்கூட்டத்தின் கட்சியின் பிரதித்தலைவரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான
எஸ்.எம்.ஏ. கபூர் அவர்கள் மேற்படி உறுப்பினர்கள் சிலர் தெரிவித்த கருத்துக்களைக் காரசாரமாகக் கண்டித்து தனது முழுமையான ஆட்சேபனையையும் தெரிவித்ததுடன் இன்றைய சூழ்நிலையில்
எமது முழு சமூகத்தின் பிரச்சினையையும் இருப்பினையும் பற்றி இன்று கேள்விக்குறியாக இருக்கும்

இத் தருணத்தில் தனிப்பட்ட அந் நபரைப்பற்றி நாம் இங்கு விமர்ச்சிப்பதும் ஊடக துறைக்கு தெரிவிக்க முனைவதும் முற்றிலும் பொருத்தமற்றது எனவும் தனது கருத்தை ஆணித்தரமாக தெரிவித்து இதனை நமது கட்சியின் கொள்கையாக மற்றவர்கள் நாளை நமக்கெதிராகக் கூறக்கூடும். எனவே ஒவ்வொருவரின் தனிப்பட்ட கோபதாபங்களையும் அவர்களின் விருப்பு வெறுப்புகளையும் எமது கட்சியின் முடிவாக நாம் இங்கு கொள்ள கூடாது எனவும் சிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர்
அவர்கள் அவைகளை எதிர்து விவாதித்தார்.

இறுதியில் கபூர் அவர்களின் கருத்தை ஏனைய உயர்பீட உறுப்பினர்கள் பலரும் பரவலாக ஏற்றுக்கொண்டபின் தலைவரும் இணைந்து இதனை அங்கிகரித்து ஆமோதிப்பதாகவும் குறிப்பிட்ட அன்னவர்களுக்கு தொடர்ந்து அறிவுரை கூறும்போது குறிப்பிட்டதாவது மற்ற நமது சகோதரனின் குறைபாடுகளை கூடுமானவரை மக்கள் மத்தியில் மறைப்பதுதான் மனிதனின் மகத்தான பண்பாகும் எனவும் எம்பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு போதித்துள்ளார் என்பதையும் இத்தருணத்தில் ஞாபகமூட்டி இந்நீண்ட விவாதத்தை நிறைவு செய்து வைத்தார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-