News Update :

Sunday, June 9, 2019

TamilLetter

இன்று முதல் நாடு முழுவதிலும் புதிய சட்டம் அமுல்! கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்: பொலிஸ் ஊடகப் பேச்சாளர்


நாடு முழுவதிலுமுள்ள பிரதான விதிகளில் வலது புறத்தில் பொது போக்குவரத்து பஸ்கள் செல்லும் நடைமுறை அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பிரதான நகரங்களில், வீதி நிரல் சட்டம் இன்று முதல் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
வாகன நெரிசல் மற்றும் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தும் வகையில் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பஸ்கள் வீதியின் வலது பக்கத்தில் செல்ல வேண்டும். கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதான வீதிகளில் இந்த பஸ்களுக்காக பிரதான வீதி நிரல் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த விஷேட வீதி நிரல் கொழும்பு, கல்கிசை வெலிக்கடை உள்ளிட்ட பகுதிகளில் ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுவாக வலது புறத்தில் பொது போக்குவரத்து பஸ்கள் செல்லும் நடைமுறை நாடு முழுவதும் அமுல்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-