முஸ்லிம் சமூகத்திற்கு இன்று ஏற்பட்டிருக்கும் அவல நிலையை போக்குவதற்கு அமைச்சுப் பதவிகளை துறக்க வேண்டுமென்று முதன் முதலில் குரல் கொடுத்தவர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ்தான் என்று அதிர்வு நிகழ்ச்சியில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
அது மட்டுமல்ல கடந்த ஆட்சியில் மாவனல்ல வன்முறையின் போதும் முஸ்லிம்கள் அமைச்சுப் பதவிகளை இராஜீனமா செய்ய வேண்டுமென்றும் அப்போது கோரியிருந்தார்.அந்த காலகட்டத்தில் பதவி விலகல் சாத்தியமற்று போய்விட்டது.
இப்படியான தீர்மானத்தை எடுத்த ஹரீசுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்