News Update :

Monday, June 10, 2019

TamilLetter

முன்கூட்டியே பொதுத் தேர்தல் -ஜனாதிபதி,பிரதமா்,எதிர்க்கட்சித் தலைவர் கலந்துரையாடல்


தற்போதைய அரசியல் ஸ்திரமற்ற நிலையை வழமைக்கு கொண்டுவரும் வகையில் முன்கூட்டியே பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரி, பிரதமர் ரணில் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தையொன்றை நடத்தியுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித்தலைவருடன் ஜனாதிபதி முன்கூட்டிய பொதுத்தேர்தலை நடத்துவது தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
இருந்தபோதிலும் இதுதொடர்பான தனது முடிவை பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவிக்கவில்லை. எனினும் ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் முன்கூட்டியே தேர்தலை நடத்துவது தொடர்பில் இணக்கப்பாடொன்றுக்கு வந்துள்ளனர்.
எனினும் முன்கூட்டியே தேர்தலை நடத்துவதெனில் நாடாளுமன்றத்தில் விசேட மசோதா நிறைவேற்றப்படவேண்டும்.
அதுவும் அனைத்து கட்சியும் ஒரே கருத்துடன் இருந்தால் அதனை நிறைவேற்றுவதற்கு எந்த தடையும் இருக்காது.
ஆனால் ஐ.தே.க.வின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் முன்கூட்டிய தேர்தலுக்கு உடன்படவில்லை எனவும் மேலும் குறிப்பிட்டுள்ளது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-